ஹிந்து வேதங்களும், பைபிளும் குர்-ஆனும்

குர்-ஆன் பல இடங்களில் ’இது இறைவனிடமிருந்து வந்த வேதம்’ என்று அடித்துச் சொல்கிறது. இதற்கு குர்-ஆன் சொல்லும் முக்கியமான காரணம் ‘குர்-ஆன் முந்தைய வேதங்களின் போதனைகளோடு ஒத்துப்போகிறது’ என்பதாகும். யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தம்மை நம்பும்படி குர்-ஆன் அழைப்பு விடுக்கிறது, ஏனென்றால், இவர்களின் முந்தைய தீர்க்கதரிசிகள் சொன்னதும், குர்-ஆன் சொல்வதும் ஒரே செய்தியாக இருப்பதினால், இவர்கள் குர்-ஆனை நம்பவேண்டும் என்றுச் சொல்கிறது. இந்த கோட்பாடு தான் சரியான கோட்பாடு. பைபிளில் கூட இதனை காணமுடியும். புதியதாக வரும் தீர்க்கதரிசிகளின் நம்பகத்தன்மை, ஏற்கனவே வந்த தீர்க்கதரிசன வெளிப்பாடுகளின் அடிப்படையில் சோதிக்கப்படவேண்டும். ஏற்கனவே வந்த வேதங்களை புதிதாக வந்த வேதங்களின் அடிப்படையில் பரிசோதிக்க கூடாது. 

முஸ்லிம்களின் பதில்: இது வேடிக்கையானது. ஒரு கிறிஸ்தவனாக, நீங்கள் இப்படி சிந்திக்கவே முடியாது, அதாவது பைபிளின் அடிப்படையில் நீங்கள் ஹிந்து  வேதங்களின் நம்பகத்தன்மையை எப்படி முடிவு செய்யமுடியும்?

குர்-ஆன் மற்றும் பைபிள் ஒப்பிடுதலுக்கும், ஹிந்து வேதங்களின் ஒப்பிடுதலுக்கும் சம்மந்தமே இல்லை. பைபிள் எந்த ஒரு இடத்திலும், ஹிந்துக்களின் வேதங்களோடு ஒத்து இருக்கிறது என்று சொல்லவே இல்லை. இதுமட்டுமல்ல, பைபிளுக்கு முன்பாக ‘ஹிந்து வேதங்கள்’ இருந்தன என்று பைபிள் சொல்வதில்லை. மேலும், ஹிந்து வேதங்களைக் கொடுத்த அதே மூலத்திலிருந்து (இறைவனிடமிருந்து) பைபிளும் வந்தது என்று பைபிள் சொல்வதில்லை. ஆனால், குர்-ஆன் தன் நம்பகத்தன்மைப் பற்றி சொல்லும் போது, மோசே, தாவீது, இயேசு போன்றவர்களுக்கு வெளிப்பாடுகளை இறக்கிய அதே இறைவனிடமிருந்து தானும் வந்தது என்று குர்-ஆன் சொல்கிறது. அதாவது இஸ்ரேல் மக்களுக்கு எந்த இறைவன் தீர்க்கதரிசிகளை அனுப்பினானோ அதே இறைவனிடமிருந்து குர்-ஆன் வந்துள்ளது என்று குர்-ஆன் கூறுகிறது. முந்தைய தீர்க்கதரிசிகளின் செய்தியும், குர்-ஆனின் செய்தியும் ஒரே மாதிரியாக இருக்கின்றபடியினால், இஸ்ரேலர்கள் குர்-ஆனை நம்பவேண்டும் என்று சொல்கிறது. இந்த ஒரு காரணத்தினால் தான் முஹம்மதுவை அனைவரும் நம்பவேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் தான், குர்-ஆனின் நம்பகத்தன்மையை பரிசோதிக்க நாம் முந்தைய வேதமாகிய பைபிளை அளவு கோளாக பயன்படுத்தவேண்டும் என்றுச் சொல்கிறோம். 

ஆனால், பைபிளுக்கு, ஹிந்துக்களின் வேதங்களுக்கும் இடையே எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும், சம்மந்தமும் இல்லை. ஆப்பிள் பழத்தோடு ஆரஞ்சு பழத்தை ஒப்பிடமுடியாது, இவ்விருவரும் வெவ்வேறான இனத்தைச் சார்ந்தவைகளாகும். ஹிந்துக்களின் வேதங்களும் பைபிள் பற்றி பேசுவதில்லை, பைபிளும் ஹிந்து வேதங்கள் பற்றி பேசுவதில்லை. 

ஆனால், குர்-ஆனின் விஷயத்துக்கு வரும் போது, குர்-ஆன் தனக்குத்தானே விதித்துக்கொண்ட நிபந்தனையை சரி பார்க்க, நாம் யூத கிறிஸ்தவ வேதங்களோடு குர்-ஆனை ஒப்பிடுகிறோம். குர்-ஆனின் லாஜிக் உண்மையாக இருக்குமானால், முந்தைய வேதங்களுக்கும் (பைபிளுக்கும்), குர்-ஆனுக்கும் இடையே எந்த ஒரு முரண்பாடும் இருக்கக்கூடாது. ஆனால், இந்த சோதனையில் குர்-ஆன் படுதோல்வி அடைந்துவிட்டது. 

குர்-ஆன் 5:49-50 வசனங்கள் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்துகின்றது:

5:46. இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.

5:47. (ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்; அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

குர்-ஆன் சொல்வது போலவே, கிறிஸ்தவர்களாகிய நாங்கள் செய்கிறோம், அதாவது எங்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களின், நற்செய்து நூல்களின் அடிப்படையில் குர்-ஆனை சோதித்துப் பார்க்கிறோம். இந்த பரிட்சையில் குர்-ஆன் தன்னுடைய வசனத்தின் படி தோல்வியை தழுவுகிறதினால், குர்-ஆனை நாங்கள் புறக்கணிக்கிறோம். 

மூலம்: http://www.answering-islam.org/Fallacies/index.html


இஸ்லாமியர்களின் இதர தர்க்கரீதியான பிழைகள்

முஸ்லிம் அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள்