தேவன் ஏன் மனிதனாக வந்தார்?

கேள்வி 

"தேவன் மரிக்க இயலுமா?" என்ற கேள்வியையும் பதிலையும் வாசித்தேன். இப்போது என் கேள்வி: தேவன் அனைத்தையும் படைத்தவராயின் ஏன் அவர் மனிதனாக அவதரிக்க வேண்டும்? அவர் எல்லாம் அறிந்தவராய் இருப்பின், இதற்கு அவசியம் என்ன? 

பீட்டர் பாலார்து பதிலளிக்கிறார்: 

தத்துவ ரீதியான பதில்: 

1. தேவன் பாவங்களை வெறுக்கிறார். பாவநிவர்த்திக்கு ஒரு விலை கொடுக்கப்பட வேண்டும். 

2. மனிதர்களே அதை செலுத்த வேண்டும். ஏனென்றால் பாவம் அவர்கள் செய்ததே. 

3. ஆனால் தேவன் மட்டுமே அந்த விலையைக் கொடுக்க முடியும். காரணம், மனிதர்கள் பரிபூரணமான பரிசுத்தவான்கள் அல்ல. 

4. எனவே மனுக்குலத்தின் பாவங்கள் தீர தேவனே மனிதனாக வந்து பாவத்திற்கான விலையைத் தருவதே சரியான ஒரே வழியாகும். 

இதோடு கூட‌, தேவன் மனிதனானதால்

(அ) நாம் எப்படி வாழ்வதென வழிகாட்டினார்

(ஆ) மனித வாழ்வின் துயர்களில் பங்கெடுத்தார்

மொத்தத்தில் தேவன் "நான் சொல்வதைச் செய், நன் செய்வதை மட்டும் செய்யாதே" என்று கூறுபவரில்லை. நாம் எப்படி வாழவேண்டும் என்று அவரே வாழ்ந்துக்காட்டிச் சென்றுள்ளார். 

ஆங்கில மூலம்: Why did God become human? 

இதர கேள்வி பதில்களை படிக்கவும்