மோசே சந்தித்த எரியும் புதர் அனுபவத்திற்கும், முஹம்மது சந்தித்த குகை அனுபவத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன?

ஈமெயில் உரையாடல்கள்

தலைப்பு: மோசே சந்தித்த எரியும் புதர் அனுபவத்திற்கும், முஹம்மது சந்தித்த குகை அனுபவத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன? 

தேதி: 19 மே மாதம் 2005

முஹம்மது குகையில் சந்தித்த அனுபவத்திற்கும், மோசே எரியும் புதரில் சந்தித்த அனுபவத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை எனக்கு சொல்லமுடியுமா? மேலும் இவ்விரண்டு அனுபவங்களில் ஏதாவது ஒன்றை ஒருவன் ஏன் நம்பவேண்டும்?


நம்முடைய பதில்:

அருமை சகோதரர் _______ அவர்களுக்கு வாழ்த்துதல்கள்.

எங்கள் தளத்தில் வந்து கட்டுரைகளை படித்ததற்கும், எங்களுக்கு எழுதுவதற்கு நேரம் ஒதுக்கியதற்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

முஹம்மது சந்தித்த குகை சந்திப்பிற்கும்,  மோசே சந்தித்த எரியும் புதர் அனுபவத்திற்கும் இடையே இருக்கும் ஒரு அடிப்படை வித்தியாசம், ”அந்த அனுபவங்கள் நடப்பதற்கு முன்பும் பின்பும் என்ன நடந்தது” என்பதை கவனித்தால் புரிந்துவிடும்.

மோசேயின் தரிசனம்:

“தேவன் ஆபிரகாமோடும், இதர முந்தையை குடும்ப தலைவர்களோடும் செய்திருந்த உடன்படிக்கையை”  எரியும் புதர் அனுவத்தின் மூலமாக மோசே கற்றுக்கொண்டார். மோசேக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு, தேவனால் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விவரங்கள் முன்னறிவிப்புக்களாக சொல்லப்பட்டது. அதாவது ஆபிரகாமின் சந்ததிகள் 400 ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தில் அடிமைகளாக வாழ்வார்கள் என்றும், அதன் பிறகு அவர்கள் ஒரு நாட்டைப்போன்று அதிக ஜனத்தொகையாக பெருகி அங்கிருந்து புறப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு சொல்லப்பட்டு இருந்தது. அந்த இஸ்ரேல் மக்களுக்கு எகிப்திலிருந்து விடுதலை வாங்கிக் கொடுக்க, தேவன் மோசேயை பயன்படுத்தப் போகிறார் என்று மோசேவிடம் தேவன் சொன்னார். தேவன் தம்முடைய பழமையான உடன்படிக்கையை, அந்த இரட்சிப்பை பூர்த்திச் செய்யப்போவதாக மோசேயிடம் தேவன் கூறினார். மோசேக்கு கிடைத்த அந்த எரியும் புதர் அனுபவம்,  முந்தைய காலத்தில் தேவன் தன் அடியார்களுக்கு வெளிப்படுத்திய வெளிப்பாடுகளோடு மட்டுமல்ல, மோசேக்கு பிறகு வெளிப்படப்போகிற வெளிப்பாடுகளோடும், தீர்க்கதரிசனங்களோடும், இயேசுவோடும் ஒத்துப்போனது. பரிசுத்த பைபிளின் செய்தியை அதன் அனைத்து புத்தகங்களிலும் ஒரு கோர்வையாக, முரண்பாடில்லாமல் இருப்பதை காணமுடியும். அதாவது 1500 ஆண்டுகளாக பல தீர்க்கதரிசிகள் மூலமாக எழுதப்பட்ட பைபிளின் செய்தி ஒரு கோர்வையாகயும், ஒரே அம்சத்தை கொண்டதாகவும் அவைகள் இருக்கின்றன. இதன் தொடக்கமாக தேவன் மோசேயை சந்தித்தார்.

முஹம்மதுவின் தரிசனம்:

முஹம்மது தான் சந்தித்த அந்த குகை அனுபவம் அல்லது தரிசனம், முந்தையை வேதங்களுக்கு எதிராக இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் முந்தைய வேதங்களை கொடுத்த இறைவனும், குர்-ஆனை கொடுத்த இறைவனும் ஒருவரே என்றும் சொல்லிக்கொண்டு, முந்தைய வேதங்களை எதிர்க்கவும் செய்தது. இது மட்டுமல்ல, முஹம்மதுவிற்கு இறக்கப்பட்ட குர்-ஆன் வசனங்களும் முஹம்மதுவின் காலத்தின் போதே, அடிக்கடி மாறிக்கொண்டே இருந்தன. ஆரம்ப காலத்தில் முஹம்மதுவிற்கு இறக்கப்பட்ட குர்-ஆன் வசனங்களை, பிற்காலத்தில் வந்த குர்-ஆன் வசனங்கள் இரத்து செய்துவிட்டன, அதாவது செல்லாது என்றுச் சொல்லிவிட்டன.

”நான் ஏன் இந்த இரண்டு தரிசனங்களில் ஏதாவது ஒன்றை நம்பவேண்டும்?” என்ற கேள்வியை நீங்கள் கேட்டுள்ளீர்கள். இதற்கான என்னுடைய பதில் என்னவென்றால், “இந்த இரண்டு தரிசனங்களை நம்புவதைவிட, இவ்விரு மார்க்கங்களின் புத்தகங்களை(பைபிள் மற்றும் குர்-ஆன்) மக்கள் புரிந்துக்கொள்வது தான் முக்கியமானது” என்று நான் சொல்லுவேன். சிலர் ”நான் இவ்விரு புத்தகங்களை அல்லது ஏதாவது ஒரு புத்தகத்தை நம்புவதில்லை” என்றுக் கூறுவார்கள். இப்படிச் சொல்பவர்கள், இவ்விரு புத்தகங்களையும் படித்து இருக்கமாட்டார்கள் என்பது தான் உண்மை. ஒரு புத்தகத்தை படிக்காமல், நான் அந்த புத்தகத்தை நம்பமாட்டேன் என்றுச் சொல்வது அறிவுடமையாகாது, அது படித்தவர்கள் செய்யும் வேலையல்ல. நான் ஒரு அறிவுரையை இங்கு கொடுக்கிறேன். நீங்கள் ஒரு குர்-ஆன் அத்தியாயத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அதை படியுங்கள். அதே போல ஒரு புத்தகத்தை பைபிளிலிருந்து தெரிந்தெடுத்துக் கொள்ளுங்கள், அதையும் படித்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு இவ்விரு புத்தகங்களில் உள்ள விவரங்களை ஆய்வு செய்துப்பாருங்கள். இவ்விரு புத்தகங்களில் உள்ள வித்தியாசங்களைப் பார்த்து, எந்த புத்தகத்தில் சொல்லப்பட்டதை நம்பலாம் என்று நீங்கள் முடிவு எடுங்கள். குர்-ஆனுக்காகவும், பைபிளுக்காகவும் நீங்கள் கடைத்தெருவுக்குச் சென்று அவைகளை விலை கொடுத்து வாங்கத்தேவையில்லை. இவ்விரண்டும் இணையத்தில் கிடைக்கின்றன, அவைகளை நீங்கள் படித்துப் பார்த்துக்கொள்ளலாம்.

பைபிளில் “யோவான் நற்செய்தி நூல்” என்று ஒரு நூல் உள்ளது, அதனை நீங்கள் படிக்க நான் ஆலோசனை கூறுகிறேன். இந்த புத்தகம் படிப்பதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். நான் ஒரு முஸ்லிமல்லாதவனாக இருப்பதினால், குர்-ஆனிலிருந்து எந்த ஸூராவை (அத்தியாயத்தை) படிக்கலாம் என்று நான் உங்களுக்கு  ஆலோசனை கூறமுடியாது. நீங்களாகவே ஒரு ஸூராவை தெரிவு செய்து படிக்கலாம். 

[தமிழாக்க ஆசிரியரின் ஆலோசனை: உண்மையாகவே நீங்கள் இந்த ஒப்பீடுதலைச் செய்யவிரும்பினால், பைபிளின் புதிய ஏற்பாட்டிலுள்ள முதல் நான்கு புத்தகங்களை படிக்கலாம் (மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான்). அதே போல, குர்-ஆனை எடுத்துக்கொண்டால், முதல் ஐந்து அத்தியாயங்களை படிக்க நீங்கள் தெரிவு செய்துக்கொள்ளலாம் (அத்தியாயங்கள் 1-5: அல்ஃபாத்திஹா, ஸூரத்துல் பகரா, ஸூரத்துல்ஆல இம்ரான், ஸூரத்துன்னிஸாவு & ஸூரத்துல் மாயிதா).

குர்-ஆன் மற்றும் பைபிளில் படித்த புத்தகங்களில் நீங்கள் கண்டுபிடித்த வித்தியாசங்களை ஒரு பட்டியலிடுங்கள். அதன் பிறகு எது உண்மையான வேதம் என்றும், எது சரியான மார்க்கமென்றும் வேண்டுதல் செய்யுங்கள். உண்மை இறைவன் நிச்சயம் உங்களுக்கு வழி காட்டுவான். இவ்விரு புத்தகங்களையும் ஒரே இறைவன் நிச்சயம் இறக்கியிருக்கமாட்டான், தனக்குத் தானே முரண்படமாட்டான் இறைவன்.]

முழு பைபிளில் சொல்லப்பட்டவைகளை சுருக்கமாக கற்றுக்கொள்ள விரும்பினால், அதற்கு இந்த புத்தகம் உதவும், இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.

புத்தகத்தின் பெயர்: All that the Prophets have Spoken

உங்கள் கேள்விக்கு நான் பதிலை கொடுத்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

நன்றி

இப்படிக்கு

தரியோ

இது மட்டுமல்லாம, இன்னொரு கட்டுரையும் உங்களுக்கு பேருதவியாக இருக்கும்: Mohammed the prophet versus the prophets

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Emails/moses_mhmd.htm


இதர ஈமெயில் உரையாடல்கள்