இஸ்லாமிய அகராதி  > அ வார்த்தைகள்

அன்சார் (அன்ஸார் - ANSAR)

அரபியில் இதன் பொருள் “உதவியாளர்” என்பதாகும்.

மதினாவிலிருந்து முதன் முதலில் முஸ்லிமாக மாறியவர்களை “அன்ஸார்கள்” என்று குர்-ஆன் அழைக்கிறது.  முஹம்மது மதினாவிற்கு இடம் பெயர்ந்த பிறகு, அவருக்கு உதவி செய்த அனைவரும் “அன்ஸார்கள்” என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் முஹம்மது புரிந்த போர்களிலும் பங்கு பெற்றார்கள்.

குர்-ஆன் 9:100, 117

9:100. இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.

9:117. நிச்சயமாக அல்லாஹ் நபியையும் கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸாரிகளையும் மன்னித்தான் அவர்களில் ஒரு பிரிவினருடைய நெஞ்சங்கள் தடுமாறத் துவங்கிய பின்னர், அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான் - நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான். (முஹம்மது ஜான் டிரஸ்ட் குர்-ஆன் தமிழாக்கம்)