பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் மரித்த (ரத்து செய்யப்பட்ட) குர்ஆன் வசனம் 58:12 (முஹம்மதுவிடம் தனிமையில் பேச பணம் தர வேண்டுமா?)

முன்னுரை: 

முஹம்மதுவை சுற்றி எப்போதும் மக்கள் இருந்தார்கள். முஸ்லிம்கள் அவரிடம் அடிக்கடி வந்து தனிமையில் பேசினார்கள், தங்கள் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதில்கள் தரும் படி கேட்டார்கள்.  அவரும் அவர்களுக்கு பதில்களை கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் முஸ்லிம்களின் அன்புத் தொல்லை அவருக்கு அதிகமாகிவிட்டது.  முஸ்லிம்கள் தன்னிடம் வந்து அடிக்கடி பேசுவதை முஹம்மது விரும்பவில்லை. ஆனால், நேரடியாக அவர்களிடம் சொல்லவும் அவர் விரும்பவில்லை. தன்னுடைய சொந்த வேலைகளை செய்வதற்கும் அவருக்கு நேரம் இல்லாமல் போய்விட்டது. இந்த பிரச்சினையை தீர்ப்பது எப்படி? ஒரு இஸ்லாமிய ஆன்மீக குரு, திடீரென்று மக்கள் மீது கோபம் கொள்ள முடியுமா? முடியாதல்லவா? இதற்கு வழி என்ன என்று முஹம்மது யோசித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று அல்லாஹ் ஒரு வசனத்தை இறக்கினான். 

அந்த வசனம் தான் குர்ஆன் 58:12. இந்த வசனத்தை ஐந்து தமிழாக்கங்களில் படிப்போம்: 

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:

58:12. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (நம்) தூதருடன் இரகசியம் பேச நேரிட்டால் உங்கள் இரகசியத்திற்கு முன்னர் ஏதேனும் தான தர்மத்தை முற்படுத்துங்கள். இது உங்களுக்கு, நன்மையாகவும், (உள்ளத்திற்குத்) தூய்மையாகவும் இருக்கும், ஆனால் (தான தர்மம் செய்வதற்கு) நீங்கள் வசதிபெற்றிராவிடின் - நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன். 

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

58:12. நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்முடைய தூதருடன் இரகசியம் பேச விரும்பினால், உங்கள் இரகசியத்திற்கு முன்னதாகவே (ஏழைகளுக்கு) ஏதும் தானம் செய்துவிடுங்கள். இது உங்களுக்கு நன்மையும் பரிசுத்தத் தன்மையும் ஆகும். (தானம் கொடுப்பதற்கு எதனையும்) நீங்கள் அடைந்திராவிட்டால், (அதைப்பற்றி உங்கள் மீது குற்றமில்லை.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

58:12. இறைநம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் தூதருடன் தனிமையில் பேசுவதாயின் அவ்வாறு பேசுவதற்கு முன் சிறிது தானதர்மம் செய்யுங்கள். இது உங்களுக்கு நன்மையானதும் மிகத் தூய்மையானதுமாகும். ஆனால், தர்மம் செய்வதற்கு எதுவும் உங்களிடம் இல்லையென்றால் திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான். 

மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:

58:12. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் (நம்முடைய) தூதருடன் இரகசியம் பேசினால், உங்கள் இரகசியப்பேச்சிற்கு முன்னர் தர்மத்தை முற்படுத்துங்கள், இது உங்களுக்கு மிகச்சிறந்ததும், மிகப்பரிசுத்தமானதுமாகும், (தர்மம் கொடுப்பதற்கு எதனையும்) நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லையானால், (அது குற்றமல்ல,) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிகக்கிருபையுடைவன்.

பிஜே தமிழாக்கம்:

58:12. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இத்தூதரிடம் (முஹம்மதிடம்) இரகசியமாகப் பேசினால் உங்கள் இரகசியத்துக்கு முன் தர்மத்தை முற்படுத்துங்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. தூய்மையானது. உங்களுக்கு (எதுவும்) கிடைக்காவிட்டால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

எப்படியாவது முஸ்லிம்களின் அன்பு தொல்லைகளிலிருந்து முஹம்மதுவை காப்பாற்ற வேண்டுமென்று சர்வஞானி அல்லாஹ் முடிவு செய்தான், குர்‍ஆன் 58:12 ஐ இறக்கினான்.

முஸ்லிம்கள் முஹம்மதுவிடம்  தனிமையில் பேசவேண்டும் என்று சொன்னால் அதற்கு முன்பு அவர்கள் தான தர்மம் செய்ய வேண்டும். வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால் கொஞ்சம் பணத்தை அவர்கள் செலவிடவேண்டும். அது ஏழைகளுக்கு தான் கொடுக்கவேண்டும் என்று குர்ஆன் சொல்லவில்லை. அப்துல் ஹமீது பாகவி குர்ஆன் தமிழாக்கத்தில் ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று அவர் அடைப்புக்குள் எழுதுகிறார். ஆனால் குர்ஆன் அப்படி சொல்லவில்லை. அந்தப் பணம் முஹம்மதுக்கு கொடுக்கப்பட வேண்டும்.  முஹம்மதுவிற்கு கொடுத்தாலும் அதனை அவர் ஏழைகளுக்காகத் தான் செலவிடுவார் என்று முஸ்லிம்கள் சொல்லக்கூடும். ஆனால், இங்கு பிரச்சனை வேறு ஒன்று உண்டு. தொடர்ந்து படியுங்கள்.

எவ்வளவு பணத்தை தானதர்மம் செய்வது? என்ற விஷயத்தை அல்லாஹ் குர்ஆனில் சொல்லவில்லை.

ஒரு மணி நேரத்திற்குள் இரத்து செய்யப்பட்ட வசனம்:

எவ்வளவு பணத்தை முஸ்லிம்களிடமிருந்து பெறலாம் என்று முஹம்மது கேட்டதாகவும், அலி அவர்கள் அதற்கு பதில் கொடுத்ததாகவும் ஹதீஸ்களில் வாசிக்கிறோம்.

மௌதூதி தஃப்ஸீர்:

முஹம்மது அலியிடம் கேட்டார்: எவ்வளவு பணத்தை வாங்குவது? ஒரு தினார் வாங்கலாமா? 

அலி பதில் அளித்தார்: இது மிகவும் அதிகம், மக்களால் இதனை கொடுக்கமுடியாது. 

மறுபடியும் முஹம்மது: அரை தினார் வாங்கலாமா? 

உடனே அலி: இல்லை இதுவும் அதிகம் தான் என்று பதில் அளித்தார்.  

முஹம்மது இதற்கு: சரி நீங்களே சொல்லுங்கள் எவ்வளவு வாங்கலாம்? 

அலி: ஒரு பார்லி விதை (அரிசி) அளவு தங்கம் வாங்கினால் போதுமல்லவா என்று சொன்னார். 

முஹம்மது: இல்லை இது மிகவும்  குறைவான அளவு ஆகும் என்றுச் சொன்னார்.  

வேறு ஒரு அறிவிப்பாளர் தொடரில், அலி அவர்கள் இவ்விதம் கூறியதாகச் சொல்லப்பட்டுள்ளது, அதாவது இந்த குர்‍ஆன் வசனம் (58:12) இறங்கிய போது நான் மட்டுமே அதனை நிறைவேற்றினேன். என்னைத் தவிர வேறு யாரும் அதனை நிறைவேற்றவில்லை. ஒரு குறிப்பிட்ட விவரம் பற்றி இறைத்தூதரிடம் தனிமையில் பேச நான் பணம் கொடுத்து பேசினேன். அதன் பிறகு  இந்த வசனம் இரத்து செய்யப்பட்டுவிட்டது என்றார்.

Hadrat 'Ali says when this was enjoined the Holy Prophet asked him, What should be the quantity of the charity? Should it be one dinar? I said: This is more than the people can afford. The Holy Prophet then asked: Should it be half a dinar? I said: This too is too much. Then he asked what it should be. I said. Gold equal to a barley grain. The Holy Prophet remarked: Your advice is for too little! " (Ibn Jarir, Tirmidhi, Musnad Abu ya'la). 

In another tradition Hadrat `Ali says: "This is a verse of the Qur'an which no one acted upon except me. As soon as it was enjoined, I offered the charity and consulted the Holy Prophet about a problem. " (Ibn Jarir, Hakim, lbn al-Mundhi, `Abd bin Humaid).

அதிகமாக வசூல்  செய்ய  முஹம்மது முயன்றுள்ளார். ஒரு தினார் என்ற பணத்தை வாங்கலாமா? அரை தினார் வாங்கலாமா? என்று முஹம்மது கேட்டபோது, அவரது மருமகனாகிய அலி அவர்கள், மக்கள் தாங்கமாட்டார்கள், இது அதிகம் என்றார்.  கடைசியாக ஒரு பார்லி விதை அளவிற்கு தங்கம் வாங்கலாம் என்று அலி  அவர்கள் தம் விருப்பத்தைச் சொன்னபோது, முஹம்மது 'இல்லை, இது மிகவும் குறைவு என்றார்'. 

இப்படியா ஒரு இறைத்தூதர் பணத்திற்கு ஆசைப்படுவார்?

இந்த உரையாடலை கவனித்தால், இந்த வசனத்தை அல்லாஹ் இறக்கியதாக தெரியவில்லை, முஹம்மதுவே சுயமாக தன் லாபத்திற்காக இறக்கிக்கொண்டதாகத் தெரிகின்றது. இது உண்மை என்பதற்கு இன்னும் ஆதாரங்கள் உள்ளன, தொடர்ந்து  படியுங்கள்.

குர்‍ஆன் 58:12ஐ இரத்து செய்து 58:13 வசனம் இறக்கப்பட்டது:

முஹம்மது எவ்வளவு வசூல் செய்தாரோ தெரியாது. ஆனால், இது மக்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. அந்த மக்களால் அல்லாஹ்  இறக்கிய தான தர்மத்தை கொடுக்க முடியவில்லை, எனவே அல்லாஹ் உடனே இன்னொரு வசனத்தை இறக்கி, 12ம் வசனத்தை  ரத்து செய்துவிட்டார். அந்த வசனம் தான் குர்ஆன் 58:13

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:

58:13. நீங்கள் உங்கள் இரகசியப் பேச்சுக்கு முன்னால் தான தர்மங்கள் முற்படுத்திவைக்க வேண்டுமே என்று அஞ்சுகிறீர்களா? அப்படி நீங்கள் செய்ய (இயல)வில்லையெனின் (அதற்காக தவ்பா செய்யும்) உங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்; ஆகவே, தொழுகையை முறைப்படி நிலைநிறுத்துங்கள்; இன்னும், ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; மேலும் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள்; அன்றியும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்.

இப்னு கதீர் த‌ஃப்ஸீர்:

இதைப்பற்றி இப்னு கதீர் தம்முடைய விளக்க உரையில் கீழ்கண்டவாறு கூறுகின்றார்: 

Therefore, Allah abrogated the obligation of giving this charity. It was said that none has implemented this command before except its abrogation, `Ali bin Abi Talib. `Ali bin Abi Talhah reported from Ibn `Abbas: (spend something in charity before your private consultation.) "The Muslims kept asking Allah's Messenger questions until it became difficult on him. Allah wanted to lighten the burden from His Prophet, upon him be peace. So when He said this, many Muslims were afraid to pay this charity and stopped asking. Afterwards, Allah sent down this Ayah, (Are you afraid of spending in charity before your private consultation If then you do it not, and Allah has forgiven you, then perform Salah and give Zakah) Thus Allah made things easy and lenient for them.'' `Ikrimah and Al-Hasan Al-Basri commented on Allah's statement: (spend something in charity before your private consultation.) "This was abrogated by the next Ayah: (Are you afraid of spending in charity before your private consultation...).'' Sa`id bin Abi `Arubah reported from Qatadah and Muqatil bin Hayyan, "People kept questioning Allah's Messenger until they made things difficult for him. Allah provided a way to stop their behavior by this Ayah. One of them would need to speak to Allah's Prophet about a real matter, but could not do so until he gave in charity. This became hard on people and Allah sent down relief from this requirement afterwards, (But if you find not, then verily, Allah is Oft-Forgiving, Most Merciful).'' Ma`mar reported from Qatadah that the Ayah, (When you (want to) consult the Messenger in private, spend something in charity before your private consultation.) was abrogated after being in effect for only one hour of a day. `Abdur-Razzaq recorded that Mujahid said that `Ali said, "No one except me implemented this Ayah, until it was abrogated,'' and he was reported to have said that it remained in effect for merely an hour.

இப்னு கதீர் அவர்களும் தம்முடைய தஃப்ஸீரில் (கதாதா கூறிய ஹதீஸாக), குர்‍ஆன் 58:12ம் வசனம் ஒரு மணிநேரம் தான் இருந்தது ,  அலி மட்டும் தான் 58:12ம் வசனத்தை நிறைவேற்றினார் என்று கூறுகின்றார்.

இப்னு அப்பாஸ் த‌ஃப்ஸீர்:

அப்பாஸ் கூறும் போது, ஒரு தங்க காசை (துண்டை) வெள்ளிக்காசுகளாக மாற்றி முஹம்மதுவிடம் கொடுத்து, 10 வார்த்தைகள் அடங்கிய கேள்வியை அலி அவர்கள் கேட்டதாக கூறுகின்றார். Source: quranx.com/Tafsir/Abbas/58.13

த‌ஃப்ஸீர் வாஹிதி: 

இதே விவரத்தை வாஹிதியும் தம் விளக்கவுரையில் கூறுகின்றார்.

The Companions of the Prophet, Allah bless him and give him peace, found this tough and so a dispensation was revealed”. ‘Ali ibn Abi Talib, may Allah be well pleased with him, said: “There is one verse in the Book of Allah that no one has applied before me nor is there anyone who has applied it after me. [It is] (O ye who believe! When ye hold conference with the messenger…). I had a piece of gold which I exchanged for silver pieces and whenever I conferred with the Messenger I spent one silver piece in charity until I spent them all. Then the verse was abrogated with another verse (Fear ye to offer alms before your conference?... and they will fancy that they have some standing. Lo! is it not they who are the liars?) [58:13]”.  Source: quranx.com/Tafsir/Wahidi/58.12

த‌ஃப்ஸீர் ஜலலைன்:

த‌ஃப்ஸீர் ஜலலைன் அவர்களும் கூட 58:13ம் வசனம் 12ம் வசனத்தை இரத்து செய்துவிட்டது என்கிறார்.

O you who believe, when you converse in secret with the Messenger, when you wish to converse with him privately, offer some voluntary alms before your secret talk. That is better for you and purer, for your sins. But if you find nothing, to offer as alms, then God is indeed Forgiving, of your secret conversation, Merciful, to you. In other words: nothing will be held against you for holding a secret conversation without having offered some voluntary alms [beforehand]. However, He [God] abrogated this later by saying:  Source: quranx.com/Tafsir/Jalal/58.12

முஸ்லிம்களுக்கு நம்முடைய கேள்விகள்:

இதுவரையில் குர்‍ஆன் 58:12 மற்றும் 13ம் வசனங்களை ஆய்வு செய்தோம். புகழ்பெற்ற  இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கவுரைகளையும் கண்டோம் (அவைகளின் தொடுப்புக்களும் கொடுத்துள்ளேன், வாசகர்கள் கொடுக்கப்பட்ட ஆங்கில தொடுப்புக்களை சொடுக்கி படித்துக்கொள்ளலாம்).

முஸ்லிம்கள் சிந்திப்பதற்கு கீழ்கண்ட கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன:

1) குர்‍ஆன் 58:12ஐ, அடுத்த வசனம் 13, இரத்து செய்துவிட்டது.

2) முஹம்மதுவின் மருமகனாகிய அலி சொல்கிறார் “இந்த வசனத்தை நான் மட்டுமே நிறைவேற்றினேன். அதன் பிறகு ஒரு மணிநேரத்திற்குள் அது இரத்து செய்யப்பட்டு விட்டது”.

3) அல்லாஹ் சர்வ ஞானியாக இருந்திருந்தால் முஸ்லிம்களால் செய்யமுடியாத கட்டளைகளை ஏன் குர்‍ஆனில் இறக்கி, உடனே அது  முடியாது என்ற பட்சத்தில் இரத்து செய்கின்றான். 

4) இந்த செயலை எதிர்காலம் பற்றிய அறிவு இல்லாத மனிதன் செய்யலாம், அல்லாஹ் செய்யலாமா?

5) முஹம்மதுவிற்கு தனிமையில் ஓய்வு நேரம் தேவை என்று அல்லாஹ் எண்ணியிருந்தால், அதற்காக ஒரு நேரடி வசனத்தை கொடுத்தால் போதாதா? அதை விட்டுவிட்டு பணம் கொடுத்து தான் நீங்கள் பேசவேண்டும் என்ற கட்டளையை கொடுத்து பண ஆசையை முஹம்மதுவிற்கு ஊட்டுவது சரியா? 

6) அல்லாஹ் கட்டளையிட்டால் முஸ்லிம்கள் செய்யமாட்டார்களா என்ன? அதற்காக ஏன் பணத்தை ஒரு காரணியாக அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான்? இது அறிவுடமையா?

7) சரி குர்‍ஆன் 58:12ம் வசனத்தை இறக்கினாய்? உடனே 60 நிமிடங்களுக்குள் அதனை இரத்து செய்வாயா? இது தான் இறைவனுக்கு அழகா?

8) சிலர் சொல்கிறார்கள், அந்த கட்டளை ஒரு நாள் இருந்தது, இன்னும் சிலர் 10 நாட்கள் இருந்தது என்கிறார்கள். ஆனால் அனேக தஃப்ஸீர்களில் அது ஒரு மணி  நேரம் மட்டும் தான் உயிரோடு இருந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. அதிக பட்சமாக 10 நாட்களாக இருந்தது என்று எடுத்துக்கொண்டாலும், இது அல்லாஹ்வின் ஞானத்திற்கு தகுதியான ஒன்றாக இருக்குமா? அடுத்த மணி, அடுத்த நாள், அடுத்த 10 நாட்களில் நடப்பது பற்றி தெரியாத இறைவனா நித்தியம் பற்றி  பேசுவது?

9) ஒரு மணி நேரம் மட்டும் வாழும் வசனத்துக்காக, ஜிப்ரீல் தூதனை அனுப்பி முஹம்மதுவிற்கு இறக்கி, அதனை இரத்து செய்ய அடுத்த மணிக்குளே மறுபடியும் ஜிப்ரீலை அனுப்புவது  அறிவுடையவர்களுக்கு ஏற்றச் செயலாகத் தோன்றுகிறதா?  ஒரே மணி நேரத்தில், முன்பு இறக்கிய வசனத்தை இரத்து செய்யும் கூத்து எங்கேயாவது நடக்குமா? இஸ்லாமில் மட்டுமே இது சாத்தியம்.

10)  எந்த முந்தைய நபியாவது மக்கள்  தன்னிடம் பேசவேண்டுமென்றால் பணம் கொடுக்கவேண்டுமென்று சொல்லியிருக்கின்றாரா? முஸ்லிம்கள் சொல்லமுடியுமா?

11) பைபிளில் வரும் எந்த தீர்க்கதரிசியாவது முஹம்மதுவைப்போல ஒருகையில் பணம் கொடு, அப்போது தான் உன் பேச்சை நான் கேட்பேன் என்று சொல்லியுள்ளாரா?

12) இயேசு எத்தனை அற்புதங்களைச் செய்தார், எத்தனை பேரை சுகமாக்கினார். யாரிடமாவது பணத்தை கேட்டதாக பைபிளில் பார்க்கமுடியுமா?

13) அரசாங்கத்துக்கு வரிகட்ட பணமில்லாதபோது, தன் சீடரிடம் தூண்டில் போட்டு முதலாவது அகப்படுகின்ற மீனின் வாயில் இருக்கும் காசை வரியாக செலுத்து என்றுச் சொன்னார். மக்களிடம் சுகத்திற்கு பதிலாக பணத்தை கூலியாக இயேசு கேட்கவில்லை.

இஸ்லாமையும், அல்லாஹ்வையும் முஹம்மதுவையும் என்னவென்றுச் சொல்வது?


இதர குர்-ஆன் ஆய்வுக்கட்டுரைகள்

குர்-ஆன் பக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்