ஜியாவிற்கு பதில் - 2: முஹம்மது ஒரு பாவி தான், அப்படியானால் இயேசுவின் சீடர்களின் நிலை என்ன?

முன்னுரை: இந்த கட்டுரை, ஜியா என்ற இஸ்லாமியருக்கு நான் கொடுத்துக்கொண்டு இருக்கும் மறுப்புக் கட்டுரையின் இரண்டாம் பாகம் ஆகும்.

முதல் பாகத்தை இங்கு படிக்கவும்: ஜியாவிற்கு பதில்: முஹம்மது ஒரு பாவி தான் – பாகம் 1

திரு ஜியா அவர்களின் கட்டுரையை இங்கு படிக்கலாம்: "முஹம்மது ஒரு பாவியா ?"

முதல் பாகத்தின் சுருக்கம்: நான் முதல் பாகத்தில் கொடுத்த பதிலுக்கு ஒரு சரியான தலைப்பு தரவேண்டுமென்றால் அதற்கு: முஸ்லிம்களும் "அல்லாஹ்வின் முஹம்மதுவின் சும்மாக்களும்" என்று பெயர் இடலாம். அது என்ன "சும்மாக்கள்" என்று ஆச்சரியபப்டுக்கின்றீர்களா? மேற்கொண்டு படியுங்கள்.

முஸ்லிம்களும் "அல்லாஹ்வின் முஹம்மதுவின் சும்மாக்களும்"

திரு ஜியா  அவர்களின் கருத்துப்படி, முஹம்மது பாவம் செய்யாத பரிசுத்தார் ஆவார். முஹம்மதுவை பாவி என்றும், அவர் பாவத்திற்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று குர்-ஆன் சொன்னாலும், ஜியாவைப்போன்ற இஸ்லாமியர்களின் படி, அந்த வசனங்கள் சொல்வதெல்லாம் சும்மா? அதாவது, எந்த ஒரு காரணமும் இல்லாமல், சும்மா தான் அல்லாஹ் அவ்வாசனங்களை இறக்கியுள்ளார், ஏதோ அல்லாஹ்விற்கு போர் அடித்தால் இப்படி உண்மைக்கு புறம்பான வசனங்களை இறக்குவார்:

  • முஹம்மது பாவம் செய்யாதவராக இருந்தாலும், நீ மன்னிப்பு கேள் என்று அல்லாஹ் (சும்மா) கூறுவார் (குர்-ஆன் 40:55 & 47:19)
  • முஹம்மது நபியாக மாறுவதற்கு முன்பாகவும், அதன் பின்பும் பாவமே செய்யாமல் இருந்தாலும், அல்லாஹ் அவைகளை மன்னிப்பதாக வசனங்களை (சும்மா) இறக்குவார்.  (குர்-ஆன் 48:2)

இப்படித் தான் இஸ்லாமியர்கள் அவ்வசனங்கள் பற்றி நம்புகிறார்கள். குர்-ஆன் சொல்வதற்கு எதிராக, முஹம்மது பாவத்திற்கு மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்பது இவர்களின் (இஸ்லாமுக்கு எதிரான) நம்பிக்கை.

மேலும், முஹம்மது பாவ மன்னிப்பு கேட்டதாக ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், இஸ்லாமியர்களின் கருத்துப்படி, அவைகள் எல்லாம் சும்மா தான். அந்த ஹதீஸ்கள் சொல்வதெல்லாம் உண்மை அல்ல. பாவத்தின் பக்கம் தலைவைத்து கூட படுக்கமாட்டார் இஸ்லாமியர்களின் நபி. எனவே, அவர் பாவ மன்னிப்பு கோருவதாக வரும் ஹதீஸ்கள் எல்லாம் சும்மா தான். ஏதோ மற்றவர்கள் அதைப் பார்த்து அவர்களும் முஹம்மது பாவமன்னிப்பு வேண்டிக்கொண்டது போல வேண்டிக்கொள்வார்கள் என்ற ஆசையில் அவர் வேண்டினாரே தவிர, உண்மையாக அவர் பா….வ……மே செய்யவில்லை, செய்வதில்லை செய்யமாட்டார். ஹதீஸ்களில் முஹம்மது பாவ மன்னிப்பு கோருவதாக எங்கு கண்டாலும், அவைகள் எல்லாம் "சு. . .ம். . .மா" தான்.

மேற்கண்ட விவரங்களுக்கு நான் என் முதல் பாகத்தில் மறுப்பு எழுதினேன்.  அதன் பிறகு சகோதரர் "இயேசுவின் சீடர்கள் பாவிகள் தானே" என்று கேள்வி எழுப்பினார், இந்த இரண்டாம் பாகத்தில் அவரது கேள்விக்கு பதில்களை காண்போம். இன்னும் அனேக பதில் தொடர்கள்  அவருடைய வரிகளுக்காக எழுத கர்த்தர் கிருபை அளிப்பாராக.

ஜியாவிற்கு பதில் இரண்டாம் பாகம்…. தொடர்கிறது.

//ஜியா அவர்கள் எழுதியது:

உமர் அவர்களே, நீங்கள் சொல்வது கிறிஸ்தவர்களுக்கும் பொருந்துமா?

உங்கள் கிருஷ்தவ நம்பிக்கை படி: 

ஈஷா (தன் வாழ்நாளில் அறியபடாத பெயரில் Jesus /இயேசு என்று கிறிஸ்தவர்களால் அலைகபெரும்) - இறைவன் (முன்று இறைவர்களில் ஒருவர்).

Gospel/பைபிள் (கிறிஸ்தவர்களால் இஞ்சில் என்று நம்பப்படும்) - இறை வேதம்.

அதனை நமக்கு தந்த/எழுதிய அபோஸ்த்தலர் இறைதூதர்கள்.//

ஈஸா குர்-ஆன் உமர்:

அருமையான ஜியா அவர்களே, உங்களை இந்த இரண்டாம் பாகத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி.

நான் சொல்வது கிறிஸ்தவத்திற்கு பொருந்துமா? என்று கேட்டு இருக்கிறீர்கள், ஆனால், முதலாவது நான் சொன்னது என்ன? என்று உங்களுக்கு புரிந்ததா?

அதாவது ஒரு கட்டுரைக்கு பதில் எழுதுவதற்கு முன்பு, அந்த கட்டுரையை முழுவதுமாக படித்து, மையக்கருத்தை புரிந்துக்கொண்டு எழுதமாட்டீர்களா?  நீங்கள் புரிந்துக்கொண்ட விதமே தவறு என்பதை நான் இந்த கட்டுரையில் விவரமாக விளக்குகிறேன். தொடர்ந்து படியுங்கள்.

//ஜியா அவர்கள் எழுதியது:

Apostle terminology:

The word "apostle" has two meanings, the broader meaning of a messenger and the narrow meaning of an early apostle directly linked to Jesus Christ. The more general meaning of the word is translated into Latin as 'missio', and from this word we get 'missionary.' Referrence:

en.wikipedia.org/wiki/Apostle_(Christian)

பைபிள் புதிய ஏற்பாட்டின் இறைதூதர்கள் யார்?

கிருஷ்தவ அறிஞர்கள் மத்தியில் அபோஸ்த்தலர்களின் பெயர்களில் மாற்று கருத்துகள் நிலவினாலும் அவர்களின் எண்ணிகை 12 என்பதில் மாற்று கருத்து காணமுடியவில்லை. அவை://

ஈஸா குர்-ஆன் உமர்:

திரு ஜியா அவர்களே, உங்கள் மீது எனக்கு பரிதாபம் வருகிறது. நீங்கள் உங்கள் பொன்னான நேரத்தை அதிகமாக வீணடித்துள்ளீர்கள் என்று தெரிகிறது.  அப்போஸ்தலர் என்றால் என்ன? அவர்கள் எத்தனை பேர் முதல் நூற்றாண்டில் இருந்தார்கள் என்ற கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் தேடி கண்டுபிடித்து, அவைகளை தமிழாக்கமும் செய்யாமல், அப்படியே பதித்துள்ளீர்கள். இவைகள் அனைத்தும் உலகம் அறிந்த விஷயங்களே.

இயேசுவிற்கு இருந்த நெருங்கிய சீடர்கள் எத்தனைப்பேர், புதிய ஏற்பாட்டு நூல்களின் ஆசிரியர்கள் யார், அவர்களுக்கும் இயேசுவிற்கும் இடையே இருந்த தொடர்பு என்ன? போன்ற விவரங்கள் அனைத்தும் அனைவரும் அறிந்ததே.

ஆகையால், இப்போது நான் "இயேசுவின் சீடர்கள் பற்றிய உங்களின் மையக்கருத்துக்கு தாவுகிறேன்". ஜியா அவர்கள் அப்படி ஆங்கிலத்தில் எவைகளை காபி பேஸ்ட் செய்தார் என்பதை படிக்க விரும்புகிறவர்கள், அவரின் கட்டுரையில் அவைகளை படிக்கலாம், தொடுப்பு இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ளேன், இருந்த போதிலும் இரண்டாம் முறை தொடுப்பு கொடுப்பதில் எனக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லை - முஹம்மது ஒரு பாவியா ? 

//ஜியா அவர்கள் எழுதியது:

அந்த கட்டுரையில் உமர் அறிவித்த படி...

1. ஒரு இறை தூதர் பாவ மன்னிப்பு கோருகையில் தன்னையும் சேர்த்துக்கொள்ள கூறினால் அவர் - பாவி

2. ஒரு இறை தூதர் தன் இறைவனிடம் பாவ மன்னிப்புகோரினால் அவர் - பாவி

3. ஒரு இறை தூதர் பாவமன்னிப்பு கோரும்படி அடுத்தவர்களை பணித்தால் அவர் - பாவி

4. ஒரு இறைதூதர் எவ்வாறு பாவ மன்னிப்பு கோரவேண்டும் என்று எடுத்துரைத்தால்,  தான் வாழ்நாளில்பாவமன்னிப்பு கோரி முன் உதாரனமாக வாழ்ந்துகட்டினால் அவர் – பாவி

5. இறைவன் ஒரு இறை தூதரின் பாவத்தை மன்னித்ததாக அறிவித்தால் அந்த தூதர் ஒரு - பாவி

6. இறைவன் ஒரு இறை தூதரை பாவமன்னிப்பு  கேட்கபணித்தால் அந்த இறை தூதர் ஒரு - பாவி //

ஈஸா குர்-ஆன் உமர்:

உங்களின் இதே வரிகளுக்கு, என் முதல் பாகத்தில் பதில் கொடுத்துள்ளேன். நீங்கள் அவைகளை மறுபடியும், இயேசுவின் சீடர்கள் அல்லது அப்போஸ்தலர்கள் பற்றி எழுதும் போதும் மறுபதிவு செய்துள்ளீர்கள். இயேசுவின் சீடர்கள் பற்றிய உங்களின் விவரங்களுக்கு நான் பதிலை கீழே கொடுக்கிறேன், அவைகளை படித்த பிறகு உங்களின் மேற்கண்ட மறுபதிவு வரிகள் அர்த்தமற்றதாகிவிடுவதை நீங்கள் காண்பீர்கள். தொடர்ந்து படியுங்கள். 

//ஜியா அவர்கள் எழுதியது:

பைபிளில் ஈஷா (அலை) "பாவம் பண்ணியவருகே பாவமன்னிப்பு, பாவமற்றவருக்கு மன்னிப்பு தேவை இல்லை, அவனுக்காக தான் வரவில்லை" என்று உரைக்கிறார்...

Luke5:31 Jesus answered them, "Those who are well don't need a physician, but those who are sick do. 5:32 I have not come to call the righteous, but sinners to repentance."//

ஈஸா குர்-ஆன் உமர்:

உங்களுக்கு ஒரு சின்ன அறிவுரையை கொடுக்க விரும்புகிறேன். அது என்னவென்றால், நீங்கள் பைபிள் வசனங்களை ஆங்கிலத்தில் பதிக்கிறீர்கள், அது நல்லது தான், ஆனால், அதே வசனத்தை தமிழில் பதிப்பதில்லை ஏன்? ஒரு வேளை பதித்தாலும், மேற்கண்ட விதத்தில் நீங்கள் சுயமாக ஏன் தமிழாக்கம் செய்கிறீர்கள்? இணையத்தில் தமிழ் பைபிள் தளங்கள் இருப்பது உங்களுக்கு தெரியாதா?  தமிழ் மக்களுக்கு கட்டுரைகளை எழுதும் போது, முதலாவது முக்கியத்துவம் வசனங்களை தமிழில் கொடுக்கவேண்டும், மேலும் மேலதிக தெளிவிற்காக, ஆங்கில வசனங்களை மேற்கோள் காட்டலாம். எனவே, தமிழில் பைபிள் வசனங்களை  பதிக்க முயற்சி எடுங்கள், உங்கள் சுயமான மொழியாக்கம் இங்கு தேவையில்லை, அது உங்கள் கட்டுரைக்கே ஆபத்தாக முடியும்.

[குறிப்பு: நான் பொதுவாக குர்-ஆன் வசனங்களை தமிழில் முதலாவது பதிப்பேன், மேலதிக விவரங்களுக்காக ஆங்கிலத்தில் பதிப்பேன், அதே நேரத்தில் அது எந்த ஆங்கில குர்-ஆன் மொழியாக்கம் என்பதையும் குறிப்பிடுவேன். சில ஹதீஸ்கள் எனக்கு தமிழில் கிடைக்கவில்லையானால், அதனை மட்டுமே மொழியாக்கம் செய்வேன், முடிந்த வரை இஸ்லாமிய மொழியாக்கங்களிலிருந்தே குர்-ஆன், ஹதீஸ் மேற்கோள்களை பதிப்பேன், இது வாசகர்களுக்கு உதவியாக இருக்கும், என் பதிலின் நம்பகத் தன்மையையும் இது அதிகரித்துவிடும்]

சரி, உங்கள் விஷயத்திற்கு வருகிறேன்.

ஏன் பைபிளின் வசனங்களை சொந்தமாக தமிழாக்கம் செய்யாமல் அப்படியே தமிழ் பைபிளிலிருந்து எடுத்து பதியுங்கள் என்று கேட்டுக்கொண்டேன் என்பது இப்போது வாசகர்களுக்கு புரியவரும். திரு ஜியா அவர்கள் பதித்த லூக்கா 5:31ம் வசனத்தை இப்போது சரியாக படியுங்கள். 

லூக்கா  5:29  அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள். லூக்கா  5:30  வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். லூக்கா  5:31  இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. லூக்கா  5:32  நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.

இந்த வசனத்தில் "நீதிமான்கள்", "பாவிகள்" என்று இரு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. திரு ஜியா அவர்கள் பதித்த பைபிள் விளக்கத்தைப் பாருங்கள்.

//திரு ஜியா அவர்கள் எழுதியது:

பைபிளில் ஈஷா (அலை) "பாவம் பண்ணியவருகே பாவமன்னிப்பு, பாவமற்றவருக்கு மன்னிப்பு தேவை இல்லை, அவனுக்காக தான் வரவில்லை" என்று உரைக்கிறார்...// 

ஈஸா குர்-ஆன் உமர்: 

லூக்கா 5:31ஐ சரியாக விளங்கிக்கொள்ளவேண்டுமென்றால், அதற்கு முன்புள்ள சில வசனங்களையும் சேர்த்து படிக்கவேண்டும், ஆகையால் தான் நான் லூக்கா 5:29 - 32 வரை பதித்துள்ளேன்.

இந்த இடத்தில் "நீதிமான்கள்" என்று இயேசு கூறுவது, தங்களை தாங்களே நீதிமான்கள் என்று கருதிக்கொள்பவர்களை. உண்மையில் அவர்கள் நீதிமான்கள் அல்ல, இருந்தாலும் தங்களை நீதிமான்கள் என்று அவர்கள் சுயமாக கருதிக்கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்காக தான் வரவில்லை என்று இயேசு கூறுகிறார்.

அதே போல, "பாவிகளுக்காக" வந்தேன் என்று இயேசு கூறுவதின் அர்த்தம், தாங்கள் பாவிகள், தங்களுக்கு இறைவன் வேண்டும், என்று சொல்லும் நபர்களுக்காக வந்தேன் என்பதாகும். இயேசு வரி வசூலிப்பவர்களோடு உட்கார்ந்து சாப்பிடுவதினால், தங்களை பரிசுத்தவான்கள் என்றும் நீதிமான்கள் என்றும் கருதும் பரிசேயர்களாகிய யூத மத தலைவர்கள், இயேசுவை குற்றம் பிடித்தார்கள். இவர் ஏன் பாவிகளோடு உட்கார்ந்து சாப்பிடுகிறார் என்பது அவர்களின் குற்றச்சாட்டு. அவர்களுக்கு இயேசு பதில் கொடுத்தார், நீங்கள் உங்களை நீதிமான்கள் என்று கருதுகிறீர்கள், அதனால் என் தேவை உங்களுக்கு இல்லை, எனவே, உங்களுக்காக நான் வரவில்லை என்று பதில் அளித்தார்.  இந்த கட்டுரைக்கு இந்த வசனம் பற்றி நான் விளக்கத்தேவையில்லை, இருந்த போதிலும், ஒரு சுருக்கமான பதிலை கொடுத்தேன், தேவைப்பட்டால் விளக்கமாக இன்னொரு கட்டுரையில் லூக்கா 5:31,32 பற்றி காண்போம்.

இப்போது, இக்கட்டுரையின் மையக்கருத்துக்கு மறுபடியும் செல்வோம்.

//ஜியா அவர்கள் எழுதியது:

பைபிளில் இறை தூதர்கள் (அபோஸ்த்தல்ஸ்) பாவமன்னிப்பு கேட்டார்களா?

ஜானின் பரிந்துரைபடி, "ஜான்" பாவம் செய்யாதவர் என்று சொன்னால் ஈஷா (அலை) அவர்களை பொய்யர் என்றாக்குகிறோம், ஈஷா (அலை) வின் வார்த்தை நம்முடன் இருக்காது. உமர் அவர்களின் கூற்றுபடி "ஜான்" ஒரு பாவி என்றால் அவரால் வளங்கபெற்ற சுவிஷேசம்???//

ஈஸா குர்-ஆன் உமர்:

ஜியா அவர்கள் "யோவான்" என்ற சீடர் பற்றி மேற்கண்ட கேள்வியை  நம்மிடம் கேட்டது போலவே, பவுல், பேதுரு, யாக்கோபு, மாத்தேயு, மாற்கு, லூக்கா, யூதா  போன்றவர்கள் பற்றியும் கேட்டுள்ளார். அதே வரிகளை எழுதி, பெயரை மட்டும் மாற்றி அதே கேள்வியை கேட்கிறார். எனவே, நான் ஒரே முறை அவர் எழுதியதை மேலே மேற்கோள் காட்டியுள்ளேன்.

ஜியா அவர்களின் புரிந்துக் கொள்ளுதலில் உள்ள தவறு:

நான் ஏற்கனவே இந்த கட்டுரையின் ஆரம்பத்தில்,"ஜியா அவர்கள் என் கட்டுரையின் மையக்கருத்தை புரிந்துக்கொள்ளாமல் பதில் கொடுத்துள்ளார்" என்று குற்றம்சாட்டியிருந்தேன்.

என்னுடைய "முஹம்மது ஒரு பாவியா?" என்ற மூன்று தொடர் கட்டுரைகளை படித்துவிட்டு, ஜியா அவர்கள் புரிந்துக்கொண்டது என்னவென்றால், "முஹம்மது ஒரு பாவி என்று நான் விவரித்துவிட்டு, இப்படிப்பட்ட பாவியான மனுஷன் கொண்டு வந்ததை எப்படி வேதம் (குர்-ஆன்) என்று கூறுகிறீர்கள்" என்று நான் கேட்டதாக அவர் புரிந்துக்கொண்டுள்ளார். இவரின் தவறான புரிந்துக்கொள்ளுதல், அவர் இயேசுவின் சீடர்கள் பற்றி எழுத வைத்துள்ளது.

அதாவது, முஹம்மது ஒரு பாவி, அவர் மூலமாக வந்ததை வேதம் என்று ஏற்காத உமர், எப்படி இயேசுவின் சீடர்கள் பாவிகளாக இருக்கும் போது, அவர்கள் மூலமாக வந்ததை (சுவிசேஷங்கள்) எப்படி உமர் வேதமாக கருதுகிறார்? இது தான் அவரது கேள்வி.

இப்போது பிரச்சனை என்னவென்றால், திரு ஜியா அவர்களுக்கு சரியாக படிக்கத்தெரியவில்லை என்பதாகும். ஒரு வேளை சரியாக படித்தாலும் அதனை புரிந்துக்கொள்ளக்கூடிய அறிவு அவருக்கு இல்லை என்பதாகும்.  ஏன் நான் இப்படி சொல்கிறேன்? என்று கேள்வி கேட்டால்,  என்னுடைய அந்த மூன்று கட்டுரைகளிலும், முஹம்மது ஒரு பாவியாக இருப்பதினால் அவருக்கு கொடுக்கப்பட்டது வேதமாக இருக்கமுடியாது, ஏனென்றால் ஒரு பாவமும் செய்யாத மனிதன் மூலமாக மட்டுமே வேதம் கொடுக்கப்படமுடியும் என்று நான் சொல்லவே இல்லை". அதற்கு பதிலாக, ஒரு பாவியான மனிஷன் மூலமாக கூட, இறைவன் வேதங்களை கொண்டு வரமுடியும், அதனை நீங்கள் அங்கீகரித்துக்கொள்ளுங்கள் என்று தான் நான் எழுதியுள்ளேன். 

நான் இப்படி சொல்லியிருக்கிறேன் என்பதை நம்ப நீங்கள் மறுத்தால், இதோ அந்த கட்டுரையிலிருந்து இந்த முக்கிய மையக்கருத்தை மேற்கோள் காட்டுகிறேன். இந்த விவரங்களை சரி பார்க்க விரும்புகிறவர்கள், தங்கள் கணினியில் என் பழைய கட்டுரையை பதிவிறக்கம் செய்துக்கொண்டு இருந்திருந்தால் அதோடு சரி பார்க்கவும் அல்லது இணையத்தில் உள்ள தொடுப்புகளை சொடுக்கி சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

//"பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? – குர்-ஆனின் சாட்சி" என்ற கட்டுரையிலிருந்து மேற்கோள்:

"மேலே உள்ள விவரங்களின் சுருக்கம் இது தான், அதாவது ஆரம்ப காலத்தின் உண்மையான இஸ்லாம் முஹம்மது ஒரு பாவி என்பதை போதிக்கின்றது. ஆனால், அதன் பிறகு வந்த இஸ்லாமியர்களுக்கு இயேசுவை விட முஹம்மது மிகவும் தரத்தில் தாழ்ந்தவர் என்பதை பார்க்கும் போது அவமானமாக காணப்பட்டது. எனவே, இயேசுக் கிறிஸ்து போல முஹம்மது பரிசுத்தமுள்ளவர் என்ற ஒரு புதிய கோட்பாட்டை இஸ்லாமியரகள் உருவாக்கினார்கள். ஆனால், முஹம்மது எதை போதித்தாரோ அதற்கு முரண்பாடாக இஸ்லாமியர்களின் இந்த கோட்பாடு உள்ளது. இப்படி இருந்தும், குறைபாடுள்ள மனிதர்களின் கைகளில் தவழும் குர்ஆன் இத்தனை நூற்றாண்டுகளாக கெடாமல் பரிசுத்தமாக அப்படியே இருக்கிறது என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். இன்றும் குறைபாடுள்ள மனிதர்களிடம் இருக்கும் குர்ஆன் திருத்தப்படாமல் இருக்கிறது என்று நம்பும் இவர்கள், அல்லாஹ் ஒரு பாவியான மனிதன் (முஹம்மது) மூலமாக குர்ஆனை கொடுக்கமுடியும் என்று ஏன் நம்பக்கூடாது?"

மூலம்: http://www.answering-islam.org/tamil/authors/silas/mo-sinner1.html   & http://isakoran.blogspot.in/2010/03/1_15.html  //

நான் மேலே மேற்கோள் காட்டிய கடைசி வரிகளை (அடிக்கோடு இட்ட வரிகளை) இன்னொரு முறை படியுங்கள்.

ஒரு பாவியான மனிஷன் மூலமாக, அல்லாஹ் குர்-ஆனை இறக்கமுடியும் என்று ஏன் முஸ்லிம்கள் நம்பக்கூடாது? இறைவனால் இது சாத்தியமாகும் என்று முஸ்லிம்கள் ஏன் நம்பக்கூடாது? அதைவிட்டுவிட்டு, ஒரு புதிய கோட்பாட்டை குர்-ஆனுக்கு எதிராக ஏன் உருவாக்க முயற்சி எடுக்கிறார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது.   பாவங்கள் செய்யக்கூடிய முஸ்லிம்கள் கையில் தவழும் குர்-ஆன் கெடுக்கப்படாமல் பாதுகாக்க அல்லாஹ்வினால் முடியும் என்று நம்பும் முஸ்லிம்கள், அந்த குர்-ஆனை ஏன் ஒரு சாதாரண பாவியான மனுஷன் மூலமாக இறக்கியிருக்கமுடியாது? என்று நம்பக்கூடாது. சிந்தியுங்கள் முஸ்லிம்களே.

ஆக, என் கட்டுரையில் முதலாவது, இந்த மையக்கருத்தை (சுருக்கத்தை) சொல்லிவிட்டு தான், குர்-ஆனிலிருந்து  ஆதாரங்களை கொடுக்க ஆரம்பித்தேன். இதனையே படிக்க தவறிவிட்டார் திரு ஜியா அவர்கள்.

திரு ஜியா அவர்களே, உங்களுக்கு ஒழுங்காக படிக்கத் தெரியாதா? குர்-ஆனை படிப்பதுபோல பொருள் தெரியாமல் கட்டுரைகளையும் படிக்கிறீர்களா என்ன?

நான் இந்த இரண்டாம் பாகத்தின் ஆரம்பத்தில் கூறிய படி, இயேசுவின் சீடர்கள் பற்றி திரு ஜியா அவர்கள் எழுதியது, தானாகவே அர்த்தமற்றதாகி விட்டது இப்போது. திரு ஜியா கீழ்கண்ட கேள்வி கேட்கிறார்:

//உமர் அவர்களின் கூற்றுபடி "ஜான்" ஒரு பாவி என்றால் அவரால் வளங்கபெற்ற சுவிஷேசம்???//

உங்களின் மேற்கண்ட கேள்வி உங்கள் தவறான புரிதலினால் உண்டானது என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். இதோ இயேசுவின் சீடர்கள் பற்றிய சுருக்கம்:

  1. இயேசுவின் சீடர்களும் சாதாரண மனிதர்களே
  2. அவர்களும் நம்மைப்போல பாவம் செய்த மனிதர்களே
  3. தேவன் சாதாரண மனிதர்களை தெரிந்தெடுத்தே தன் காரியங்களை செய்துக்கொள்கிறார்.
  4. இஸ்லாமியர்கள் நினைப்பது போல, "ஒரு பாவமும் செய்யாத மனிதன் தான் இறைவனுக்கு வேண்டும்" என்று நினைத்தால், அந்த இறைவன் தான் மனிதனாக இறங்கிவரவேண்டும்.
  5. இப்படிப்பட்ட ஒரு பாவமில்லாமல் வந்தவர் தான் இயேசுக் கிறிஸ்து.
  6. இவரைத் தவிர மற்ற எல்லா சீடர்களும், பழைய ஏற்பாட்டு நபர்கள் அனைவரும் சாதாரண மனிதர்களே.
  7. ஆனால், அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட வேலையை தேவன் கொடுத்தார்.
  8. அதனை அவர்கள் முடிக்க தேவையான பரிசுத்தம், வலிமை இன்னும் கிருபையை அவர் கொடுக்கிறார். இருந்த போதிலும் அவர்கள் நம்மைப்போல சாதாரண மனிதர்களே, ஆனால், அசாதாரண காரியங்களை தேவனின் உதவி கொண்டு செய்து காட்டினார்கள்.
  9. இவர்கள் மூலமாகத்தான் தேவன் தன் வார்த்தைகளை எழுதினார், இவர்களை பயன்டுத்தியே வேதங்களை கொடுத்தார்.
  10. ஆக, எந்த ஒரு கிறிஸ்தவனும், "பிறந்தது முதல் இயேசுவின் சீடர்கள் ஒரு பாவமும் செய்யாத பரிசுத்தர்கள்" என்று நம்புவதில்லை. அப்படி ஒருவர் நம்பினால் (இப்படி இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள்) அவன் பைபிளுக்கு எதிராக நம்பிக்கை கொண்டு இருக்கிறான் என்று அர்த்தம்.
  11. இயேசுவின் சீடர்களும், இதர பழைய ஏற்பாட்டு நபர்களும், சாதாரண மனிதர்களாக இருந்தும், பாவம் செய்யக்கூடிய மனிதர்களாக இருந்தும், தேவனுக்காக அசாதாரண காரியங்களை சாதித்தார்கள் என்பதில் எங்களுக்கு அதிக மகிழ்ச்சி. அதனாலேயே நாங்கள் அவர்களை இயேசுவிற்கு அடுத்ததாக மதிக்கிறோம், கவுரவிக்கிறோம், அவர்களிடம் நாங்கள்  காணும் நல்ல காரியங்களை பின்பற்ற முயற்சி எடுக்கிறோம். அவர்களில் காணப்பட்ட தீய காரியங்களை ஒரு எச்சரிக்கையாக நினைத்து நாங்கள் கட்டுபாட்டுடன் வாழ முயற்சி எடுக்கிறோம்.

[பைபிளின் நபர்கள் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பை ஜியா அவர்கள் மூலமாக கொடுத்த தேவனுக்கு நன்றியை செலுத்துகிறேன். ஓ வேதத்தின் காதாநாயகர்களே, அப்போஸ்தலர்களே சாதாரண பாடுள்ள மனிதர்களாக இருந்துக்கொண்டு கர்த்தருக்காக சாதித்தவர்களே, உங்களை நாங்கள் நேசிக்கிறோம், உங்கள் வாழ்வை கண்டு நாங்கள் படிப்பினைகளை பெறுகிறோம்.]

ஆக, திரு ஜியா அவர்களுக்கு அனைத்து கிறிஸ்தவர்களின் சார்ப்பில் நான் சொல்லிக்கொள்வது – இயேசுவின் சீடர்கள் கூட நம்மைப்போல சாதாரண மனிதர்களே, பாவம் செய்ய சாத்தானால் சோதிக்கப்படுகின்றவர்களே, ஆனால், அவர்கள் இயேசுவின் உதவி கொண்டு பரிசுத்தமாக முடிந்த அளவு வாழ்ந்து காட்டினார்கள். இந்த சாதாரண மனிதர்களைக் கொண்டே தேவன் அசாத்திய செயல்களை செய்தார், வேதங்களை கொடுத்தார். ஆக, ஒரு மனிதன் மூலமாக வேதம் கொடுக்கப்படுவதற்கு தேவனுக்கு பிறந்தது முதல் "100%"  பரிசுத்தமாக வாழ்ந்த மனிதன் தேவையில்லை. ஒரு பலவீனமான மனிதனைக்கொண்டு, எப்படிப்பட்ட காரியங்களை செய்யவேண்டுமென்று தேவன் விரும்புகிறாரோ, அதனை அவர் கச்சிதமாக செய்துமுடிப்பார். இப்படி செய்ய சக்தி படைத்தவரையே நாம் தேவன் அல்லது இறைவன் என்று அழைக்கமுடியும்.

எனவே, நம்மைப் போல சாதாரண மனிதர்களே இயேசுவின் சீடர்களும், அவர்களைக் கொண்டே இயேசு முதல் நூற்றாண்டை அசைத்தார். (இந்த காலகட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு இருக்கும் சாதாரண  தமிழ் கிறிஸ்தவர்களால் தமிழ் இஸ்லாமிய உலகை கொஞ்சம் அசைத்துக்கொண்டு இருக்கிறார், அவருக்கே மகிமை உண்டாகட்டும்)  அந்த இயேசுவின் சீடர்கள் மூலமாகவே தன் வார்த்தைகளை எழுதிக்கொண்டார்.  ஆக, நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டதா? இனி எழுதுவதற்கு முன்பாக, ஒரு பேப்பர் எடுத்துக்கொண்டு, ஒரு கட்டுரையில் சொல்லப்பட்ட முக்கியமான செய்தி என்ன என்பதை குறித்துக்கொண்டு அதன் படி எழுதவும்.

[அதனால் தான் நான் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு சொல்லிக்கோண்டு இருக்கிறேன், என்னுடைய கட்டுரைக்கு  பதில் அளிக்கும்போது வரிக்கு வரி பதில் அளியுங்கள், பத்திக்குபத்தி பதில் அளிக்க முயற்சி எடுங்கள், அப்போது எந்த ஒரு மையக்கருத்தும் உங்கள் கவனைத்தை விட்டு வெளியே செல்லாது. யார் என் பேச்சை கேட்கப்போகிறார்கள்? கேட்காதவர்களின் காது வெட்டப்படும், இப்போது ஜியா அவர்களுக்கு வெட்டப்பட்டுக்கொண்டு இருப்பது போல.]

//திரு ஜியா அவர்கள் எழுதியது:

அச்சச்சோ, கிருஷ்தவர்களால் இறைவனாக வணங்கப்பெரும் ஈஷா (அலை) அவர்கள் பாவமன்னிப்பு கோரும்படி பரிந்துரைக்காத இறைதூதர்களே (அபோஸ்த்தல்) இல்லையா? பாவமன்னிப்பு கோராத இறைதூதர்களே (அபோஸ்தல்) இல்லையா? உமர் அவர்களே நீங்கள் முயற்சித்தால் இஸ்லாமியருக்கு எதிராக குர்ஆனிலும், ஹதிசிலும் இடை சொருகல்கள் செய்வது போல பாவமன்னிப்பு இல்லாதபைபிளின் புதிய ஏற்பாட்டின் அத்தியாயத்தை உருவாக்க முடியும், பைபளின் KJV புதிய ஏற்பாடு (27 புத்தகங்கள்) RCV புதிய ஏற்பாடு (27 + 6 /7 = 33/34 புத்தகங்கள்) இருபது போல இனி வரும் காலங்களில் "உமரின் சுவிஷேசம்" என்று ஒன்றை சேர்த்துக்கொள்ளலாம்!!!.//

ஈஸா குர்-ஆன் உமர் எழுதியது:

அப்போஸ்தலர்கள் பாவ அறிக்கை செய்தவர்களே, தங்கள் பாவங்களை இயேசுவிற்கு முன்பாக அறிக்கையிட்டவர்களே! தங்கள் ஜெபங்களில் தாங்கள் பாவிகள் என்று சொன்னவர்களே. இதையே உங்கள் முஹம்மதுவும் செய்தார்.

நான் உமரின் சுவிசேஷம் என்று ஒன்று எழுதத்தேவையில்லை.  ஆனால், குர்-ஆன் சொல்வதை மறுத்துவிட்டு, ஹதீஸ்கள் சொல்வதை தள்ளிவிட்டு, முஹம்மது தம்மைப் பற்றி கூறியதை, குப்பையில் போட்டுவிட்டு, குர்-ஆனுக்கு எதிராக குர்-ஆன் சொல்லாத புதிய கோட்பாடுகளை நீங்கள் தான் உருவாக்கிக்கொண்டு இருக்கிறீர்கள். எனவே, இடைச்செருகல்களை குர்-ஆனுக்கு எதிராக உண்டாக்குபவர்கள் நீங்கள் தான்.

நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன், ஏனென்றால், உங்கள் மத்தியிலே ஒரு குழு எழும்பி, "முஹம்மது பாவம் செய்தவர் தான், அவர் சாதாரண மனிதர் தான், அவர் மூலமாக அல்லாஹ் தன் காரியங்களை செய்துக்கொண்டார், அவர் மூலமாக குர்-ஆனை கொடுத்தார்" என்றுச் சொல்லி, நான் இன்று சொன்னதுபோல சொல்லுவார்கள். அன்று நீங்கள், அவர்களோடு விவாதம் புரியவேண்டிவரும்.  அதற்காக இப்போதிலிருந்து தயார் ஆகிவிடுங்கள். யாருக்குத் தெரியும், எதிர்காலத்தில் இந்த புதிய குழு நீங்களாகவே கூட இருக்கக்கூடும். தமிழ் இஸ்லாமிய அறிஞர்களே, பலவகையான பிரிவுகளின் தலைவர்களே, பார்த்துக்கொண்டு இருங்கள், இப்படிப்பட்ட ஒரு குழு சீக்கிரமாக எழும்பப்போகிறது.

முடிவுரை:

இஸ்லாமியர் ஜியா அவர்கள் சரியாக என் கட்டுரைகளை படிக்கவில்லை. எது என் கட்டுரையின் மையக்கருத்தாக இருந்ததோ அதனையே இவர் தவறவிட்டார்.

முதலாம் பாகத்தில் – இஸ்லாமிய மூல நூல்களின் அடிப்படையில் முஹம்மது ஒரு பாவி தான் என்பதை நான் மறுபடியும் நிருபித்தேன்.

இந்த இரண்டாம் பாகத்தில், இயேசுவின் சீடர்கள் பற்றி திரு ஜியா அவர்கள் கொண்டிருந்த கருத்து தவறு என்பதை நிருபித்தேன்.

அடுத்ததாக வரப்போகும் மூன்றாம் பாகத்தில், இயேசுக் கிறிஸ்து பற்றி அவர் எழுப்பிய கேள்விக்கு பதிலைக் காண்போம்.

வாசகர்கள், இந்த தொடர் கட்டுரைகளை ஒரு வரிசைக் கிரமமாக படித்தால், கருத்துக்களின் ஆழம் புரியும் என்பதை  சொல்லிக்கொள்கிறேன்.

உமரின் ஜெபம்:

பாவியான மனிதர்களை தேடி வந்த கர்த்தாவே, அந்த பாவியான மனிதர்களைக் கொண்டு பெரும் காரியங்களை முடித்துக்கொள்ளும் கர்த்தாவே, உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக. உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக. இதோ, இந்த மறுப்பை எழுதிக்கொண்டு இருக்கும் உமராகிய நான் உங்களிடம் பாவ மன்னிப்பு கோருகிறேன். நீர் எனக்காக மரித்தீர், என் பாவங்களை நீர் சுமந்துக்கொண்டு என்னை பரிசுத்தமாக்கினீர். இவ்வுலகில் பரிசுத்தமாக வாழ எனக்கு கிருபை புரியும். ஒவ்வொரு நாளும் உம்மை நெருங்கவும், உம் வார்த்தையில் வளரவும், அடியேனுக்கு கிருபை புரியும். உன் வார்த்தைகளுக்கு எதிராக, எழும்பும் இஸ்லாமிய எதிர்ப்புகளுக்கு சரியான பதில்களைக் கொடுக்க ஞானமில்லாதவனாக இருக்கின்ற எனக்கு ஞானத்தைத் தாரும். என் எழுத்துக்கள் மூலமாக உம்முடைய நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும். இந்த கட்டுரைகளை படிக்கும் உம்முடைய பிள்ளைகளோடு (இஸ்லாமியர்களோடு, கிறிஸ்தவர்களோடு… இதர மக்களோடு) நீர் அவர்கள் உள்ளத்தில் பேசும். உம்மை அவர்கள் அறிந்துக்கொள்ள உதவி புரியும்.

இயேசுவின் இன்ப நாமத்தில் வேண்டுக்கொள்கிறேன், பிதாவே. ஆமென்.

இஸ்லாமிய நபி முஹம்மது பற்றி மேலும் அறிய விரும்புகிறவர்கள் கீழ்கண்ட தமிழ் கட்டுரைகளை படிக்கலாம்:

101 காரணங்கள் - முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள்  கருதுவது ஏன்?

மேற்கண்ட கட்டுரைகளுக்கு இஸ்லாமியர்கள் அளித்த மறுப்பும் எங்கள் பதிலும்:

மூலம்: http://isakoran.blogspot.in/2013/03/2_17.html

ஜியாவிற்கு மறுப்புக்கள்

உமரின் இதர கட்டுரைகள்