எல்லா முஸ்லிம்களும் “தீவிரவாதத்தில் ஈடுபடுவதற்கு” நட்டு கழன்றவர்கள் (பைத்தியங்கள்) அல்ல‌

பகுத்தறிவுள்ள, சுய நினைவில் உள்ள ஒரு நபர் நிச்சயமாக முஸ்லிம் தீவிரவாதியாக இருக்கமுடியாது என்று முஸ்லிம்கள் கூறுவார்கள். ஆனால், இக்கூற்றில் உண்மையுள்ளதா?

கடந்த சில வருடங்களாக இஸ்லாத்தைப் பற்றி நான் வகுப்புக்கள் எடுக்கும் போதும் மற்றவர்களிடம் உரையாடும் போதும், "பயங்கரவாதிகள் பைத்தியக்காரர்கள் ஆவார்கள், அல்லது குழப்பப்பட்ட‌ முஸ்லிம்கள்" என்று பலர் நினைப்பதை நான் கவனித்தேன். முஸ்லிம் பயங்கரவாதிகள் என்பவர்கள் "படிக்காதவர்கள், ஏழைகள், வேலையில்லாத இளைஞர்கள் ஆவார்கள்" என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். இவர்கள் தற்கொலைத் தாக்குதல் செய்து மரித்தாலும், இவர்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை, தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்வதிலிருந்து இவர்கள் பகுத்தறிவில்லாதவர்கள் என்று நிருபித்துக்கொள்கிறார்கள் என்றும் நல்ல முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலைப்பாடு உண்மையாக இருக்கவாய்ப்பு இல்லை. முஸ்லிம்களால் எழுதப்பட்ட இந்த ஆய்வுக்கட்டுரை (Islam's best, brightest and (increasingly) radical By Hassan M. Fattah Published: July 15, 2007) என்ன சொல்கிறது தெரியுமா? பல முஸ்லிம் பயங்கரவாதிகள் படித்தவர்களாகவும், நல்ல வேலைகளை செய்கிறவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்று கூறுகிறது. மேலும், இவர்களில் மருத்துவர்கள் இருக்கிறார்கள், வங்கியாளர்கள் இருக்கிறார்கள், பொறியாளர்கள் இருக்கிறார்கள் மற்றும் நல்ல குடும்பங்களோடும், பிள்ளைகளோடும் வாழும் மக்களாக இருந்துள்ளார்கள் என்று கூறுகிறது. இப்படிப்பட்டவர்கள் தற்கொலை தாக்குதல் செய்து, மற்றவர்களையும் கொன்று, இவர்களும் கொல்லப்படுவதால், இவர்கள் குடும்பங்களை இழக்கிறார்கள், இவர்களின் குடும்பங்கள் அனாதைகளாகிறார்கள். எனவே, முஸ்லிம் தீவிரவாதிகள் பகுத்தறிவில்லாதவர்கள், பாமர மக்கள் என்று சொல்வதற்கில்லை.

இஸ்லாமை தவறாக புரிந்துக்கொண்டர்கள் தான் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்ற கூற்று பொய்யானது என்பது இப்போது புரிந்திருக்கும். முஸ்லீம் தீவிரவாதிகள் வீடுகளை வாங்குகிறார்கள், நல்ல‌ குடும்பங்களை உடையவர்களாக இருக்கிறார்கள், , தொழில்முறை  முன்னேற்றமான வேலைகளை செய்கிறார்கள். நாம் சில வீடியோக்களில் பார்ப்பது போன்று, தீவிரவாதிகள் ஒருவகையான மனவளர்ச்சி இல்லாதவர்கள் என்று சித்தரித்து செய்திகள் வெளியாவதெல்லாம் ஏற்புடையதன்று. ஆனால் உண்மை என்னவென்றால், முஸ்லிம்கள் அந்த தீயச் செயல்களை செய்வதற்கு முன்பு, அவர்களின் வாழ்க்கை நம்மைப்போன்று ஒரு சாதாரண நல்ல குடிமகன்களைப் போன்றே சிறப்பாக இருந்திருக்கிறது. அவர்களின் முந்தைய வாழ்க்கையைப் பார்த்தால், "இவர்களா இப்படி செய்தார்கள்" என்று ஆச்சரியப்படுவீர்கள்! எனவே, அவர்கள் புத்தியில்லாதவர்கள், மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள் என்று முத்திரைக் குத்தமுடியாது. அவர்கள் மிகவும் தெளிவாக இருந்து தான் இச்செயல்களை செய்கிறார்கள். 

முஸ்லிம் தீவிரவாதிகள் அறிவில்லாதவர்கள் அல்ல, தங்கள் மார்க்கத்தை (உம்மாவை) இடது வலது புறம் பிசகாமல் பின்பற்றுகிறார்கள். இவர்களின் நம்பிக்கை குர்ஆன் மீதும் மற்றும் ஹதீஸ்கள் மீதும் உள்ளது. இவ்விரண்டும் தான் இவர்கள் அந்த முடிவுக்கு வர உதவுகிறது.  இவர்கள் தங்கள் மார்க்கத்தில் முதிர்ச்சி அடைந்துவிட்டோம், அனைத்தும் புரிந்துக்கொண்டோம் என்று கருதும் போது, அடுத்த நிலைக்குச் செல்ல முயலுகிறார்கள், இஸ்லாமின் படி, இலக்கை அடைகிறார்கள் அவ்வளவு தான். உலக மக்களுக்கு அது தீவிரவாதமாக தெரிகிறது. இவர்களுக்கோ "அல்லாஹ் கொடுத்த கட்டளையை நிறைவேற்றுபவர்களாக" தங்களைத் தாங்களே மெச்சிக்கொண்டு மரிக்கிறார்கள்.

தங்களுடைய நல்லொழுக்கம் (ஜிஹாதிகளாக மரிப்பது), ஒரு நற்செயல், அல்லாஹ் அங்கீகரிக்கும் செயல் என்று அவர்கள் கருதுகிறார்கள், போதிக்கப்படுகிறார்கள். இங்கு ஒன்றை நாம் கவனிக்க தவறக்கூடாது, "ஒருவர் மிகவும் ஆழமாக தன் நம்பிக்கையை பின்பற்றும் போது, அது துரதிஷ்ட வசமாக, ஒரு பொய்யான மார்க்கமாகவும், அதே நேரத்தில் தீயதாகவும் இருந்தால், இஸ்லாமிய தீவிரவாதிகளால் உண்டாகும் தீய‌விளைவுகள் தொடர்ந்து நடப்பது போன்று நடக்க ஆரம்பிக்கும்". இதனை மறக்காதீர்கள்: ஒருவர் ஆழமாக எந்த செயல் செய்தாலும், அச்செயலுக்கு ஏற்ற விளைவுகள் நிச்சயம் உண்டாகும்.

மூலம்: http://www.str.org/blog/not-all-muslims-are-mad-crazy

தேதி: 27th Sep 2021


ஆலன் ஸ்லெமன் அவர்களின் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்