101 காரணங்கள் 
முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள்  கருதுவது ஏன்?

பாகம் 9

பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம் 4பாகம் 5பாகம் 6பாகம் 7, பாகம் 8ஐ படிக்க சொடுக்கவும். இந்த ஒன்பதாம் பாகத்தில் 81வது காரணத்திலிருந்து 90வது காரணம் வரை காண்போம்.

81.  நரகத்தில் பெரும்பாலோர் பெண்களாக இருக்கிறார்கள்

முஹம்மதுவிற்கு நரகம் காட்டப்பட்டதாம். அதில் பெரும்பாலோர் பெண்களாக இருந்தார்கள் என்று அவர் கூறுகிறார். இதற்கு காரணம் என்னவென்று கேட்டபோது பெண்கள் தங்கள் “'கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்தது, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்” என்று முஹம்மது பதில் அளித்துள்ளார். பெண்கள் பற்றி மிகவும் கேவலமாக முஹம்மது விமர்சித்துள்ளார். முஹம்மதுவிற்கு தெரிந்த ஒரு சில பெண்கள் புரியும் சில செயல்களை அடிப்படையாகக் கொண்டு, உலகில் உள்ள அனைத்து பெண்களும் அப்படியே நடந்துக்கொள்வார்கள்  என்று முஹம்மது நினைத்துவிட்டார். இஸ்லாமிய சமுதாயத்தில் பெண்கள் எல்லாவற்றிற்கும் ஆண்கள் மீது ஆதாரப்பட்டு இருப்பார்கள். ஆகையால், இஸ்லாமிய பெண்களை மனதில் வைத்துக்கொண்டு முஹம்மது,  ’இது தான் உலக சத்தியம்’ என்பது போல போதித்துவிட்டார். ஆண்களின் நிலை என்ன? ஆண்கள் தங்கள் மனைவிகளை நிராகரிப்பதில்லையா? நோகடிப்பதில்லையா? அடிப்பதில்லையா? ஒரு ஆண் மூன்று முறை “விவாகரத்து” என்று சொல்லிவிட்டால், விவாகரத்து நடந்துவிடும் என்றுச் சொல்லும் முஹம்மது, இதே அனுமதியை பெண்களுக்கு கொடுப்பாரா? நல்லவர்கள் கெட்டவர்கள் இருபாலாரிடமும் உண்டு, முக்கியமாக சொல்லவேண்டுமென்றால், தீய செயல்களைச் செய்வதில் பெண்களை விட ஆண்களின் சதவிகிதம் அதிகமாக இருக்கலாம். இதையெல்லாம் அறிந்துக்கொள்ளாமல், தன் மனதில் தோன்றியபடி போதனைச் செய்து, பெண்களை இழிவுப்படுத்தும் முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று நம்புவார்களா?[81]

82. பெண்கள் ஆண்களை விட ஏன் அறிவில் குறைவுள்ளவர்களாக இருக்கிறார்கள்?

நரகத்தில் பெண்கள் தான் அதிகமாக இருப்பார்களாம். இதற்கு அனேக காரணங்கள் உண்டு, அவைகளில் ஒன்று “பெண்கள் அறிவில் குறைவுள்ளவர்களாம்”, அதாவது ஆண்களை விட பெண்கள் அறிவில் குறைவுள்ளவர்களாம். இது தான் முஹம்மதுவின் போதனை.  ஏன் எங்களுக்கு அறிவு குறைவு என்று பெண்கள் முஹம்மதுவை கேட்டபோது, “சாட்சி சொல்வதில் ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதி” என்று முஹம்மது கூறியுள்ளார். முஹம்மதுவின் போதனையின் படி, சாட்சி சொல்வதில் ஒரு ஆணுக்கு இரண்டு பெண்கள் சமமாகும். இதற்கு இன்றுள்ள முஸ்லிம்கள் சொல்லும் காரணம், பெண்கள் கோழைகளாக இருக்கிறார்கள் என்பதாகும். இஸ்லாம் ஆண்களுக்கான மதம் என்பதில் இதுவும் ஒரு காரணமாகும். ஆண்களிலும் கோழைகள் இருக்கிறார்கள், பெண்களிலும் வீராங்கனைகள் இருக்கிறார்கள். அறிவு என்பது ஆண் பெண் என்ற பாகுபாடின்றி எல்லாருக்கும் கிடைக்கும் ஒரு வரப்பிராசாதம் ஆகும். அறிவை நாம் வளர்க்கவேண்டும், மூளைக்கு படிப்பு, அனுபவம் என்ற கருவிகளினால் பயிற்சி அளிக்கவேண்டும். இதையெல்லாம் அறியாத ஒரு பாமர மனிதன் சொல்லும் விவரங்களை இறைவன் சொன்னான் என்றுச் சொல்லி, அந்த அறியாமையுள்ள மனிதனை தீர்க்கதரிசி என்று நம்புவது மடமையாகும். இதனை கிறிஸ்தவர்கள் ஒருபோதும் நம்பவே மாட்டார்கள். ஆண்களுக்கு சமமாக பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள். பெண்களை தவறாக விமர்சிக்கும் ஒரு நபரை கிறிஸ்தவர்கள் ஒரு தீர்க்கதரிசி என்று நம்பமாட்டார்கள். [82]

83.  பெண்கள் தொழுகையையும், நோன்பையும் ஏன் விட்டுவிடவேண்டும்

பெண்களையும், ஆண்களையும் படைத்தவர் இறைவன். பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவது என்பது இறைவனின் படைப்பு. இதில் பெண்களின் தவறு எதுவும் இல்லை. நரகத்தில் பெண்கள் அதிகமாக இருக்கிறார்களாம். இதற்கு அனேக காரணங்கள் இருக்கிறதாம். அதில் ஒரு காரணம் ”பெண்கள் மார்க்கக் கடமைகளில் குறைவுள்ளவர்களாக” இருக்கிறார்களாம். என் மார்க்க கடமைகளில் குறைவுள்ளவர்கள் என்று பெண்கள் முஹம்மதுவிடம் கேட்டபோது, “ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கு,  'ஆம்!' எனப் பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்" என்று முஹம்மது பதில் அளித்துள்ளார்.  பெண்கள் நரகத்தில் அதிகமாக இருப்பதற்கு ஒரு காரணம், அவர்கள் ஆண்களைப்போல தொழுகையையும், நோன்பையும் மாதவிடாயின் காரணமாக செய்யமுடியாமல் போவதாகுமாம். நரகத்தில் பெண்கள் அதிகமாக இருப்பதற்கு ஒதுவெல்லாம் ஒரு காரணமாகுமா? மாதவிடாய் காலத்தில் பெண்கள் அதிகமாக வேலை செய்யாமல் இருப்பதற்கும் மேலும் அவர்கள் அதிகமாக ஓய்வு எடுப்பதற்காகவும் பழைய ஏற்பாட்டிலும் அவர்கள் மார்க்க காரியங்களில் இக்காலத்தில் ஈடுபடவேண்டாம் என்று சொல்லப்பட்டது. ஆனால், இதற்காக அவர்கள் மார்க்க விஷயத்தில் குறைவுள்ளவர்கள் என்றுச் சொல்வது சரியானதல்ல. நரகத்தில் பெண்கள் அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்றுச் சொல்வதும் சரியானதல்ல. இப்படிப்பட்ட காரணங்களைச் சொல்லி, பெண்களை இழிவுப்படுத்துவது ஒரு தீர்க்கதரிசிக்கு உகந்ததல்ல. எனவே, இப்படிப்பட்டவரை கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று ஒரு காலத்திலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.[83]

84. நரகத்தின் வெப்பக் காற்று அடங்கும்வரை லுஹர் தொழுகையைத் தாமதப் படுத்துங்கள்

ஏழாம் நூற்றாண்டில் பாலைவனப் பகுதியில் வாழ்ந்த ஒரு கிராமத்து மனிதரின் கட்டுக்கதைகள் இன்று 150 கோடிக்கும் அதிகமான மக்களின் வழிக்காட்டிகளாக உள்ளன. பூமியின் அமைப்பு, கோள்களின் அமைப்பு எப்படியுள்ளது, பூமியில் காலங்கள் ஏன் மாறுகின்றன, போன்ற அறிவியல் உண்மைகளை அறியாதவர் முஹம்மது ஆவார். கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக்காற்றின் வெளிப்பாடு என்று முஹம்மது போதித்தார். நரகம் என்றால் வெப்பம் உள்ள இடம் என்பதை அறிந்த இவர், பூமியில் நிலவும் வெப்பத்திற்கும் அதே நரகத்தின் வெப்பம் தான் காரணம் என்று நினைத்துவிட்டார். எனவே, பாலைவன பகுதியில், வெப்பம் அதிகமாக உள்ள மதிய/மாலை வேளையில் தொழுகையை செய்யவேண்டாம் என்று போதனை செய்துள்ளார். உலக மதங்கள் நரகம் பற்றி பேசினாலும், பாவம் செய்பவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று சொன்னாலும், இன்று அந்த நரகத்தினால் உலக மக்களுக்கு பாதிப்பு உண்டாகுமென்று சொல்வதில்லை. ஆனால் எதிர்காலத்தில் வெளிப்படும் நரகத்தின் பாதிப்பு இன்று நம்மை உலகில் பாதிக்கும் என்றுச் முஹம்மது சொல்வது அறியாமையாகும். இப்படிப்பட்ட பாமர போதனைகளை கிறிஸ்தவர்கள் சரியாக பகுத்து அறிவார்கள்.  எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானது எது, நலமற்றது எது என்று அறியும் அறிவு கிறிஸ்தவர்களுக்கு உண்டு. இதன் அடிப்படையில் முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் முத்திரை போடுகிறார்கள். நிச்சயமாக முஹம்மது தேவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி அல்ல. [84]

85. உலகத்தில் பிள்ளைகளை இழப்பது, நரகத்திலிருந்து தப்பிக்கும் வழியா?

பெண்களுக்கு போதனை செய்த முஹம்மது “'ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இறந்துவிட்டதால் அவர்கள் அப்பெண்ணை நரகத்திலிருந்து காக்கும் திரையாக ஆகிவிடுவார்கள்” என்று கூறியுள்ளார். உலகத்தில் ஏற்படும் இழப்பு எப்படி நம்மை நரகத்திலிருந்து காத்துவிடும்? பெற்றோர்கள் பிள்ளைகளை இழப்பது என்பது தாங்க முடியாத வேதனையான விஷயம் தான், ஆனால், இதனால் அவர்கள் நரகத்திலிருந்து தப்பிப்பார்கள் என்ற போதனை சரியானதல்ல. இதுமாத்திரமல்ல, கணவனை இழப்பதும் ஒரு பெண்ணுக்கு இன்னும் அதிகமான வேதனையான விஷயம் தான், இதற்கும் நஷ்ட ஈடாக, அல்லாஹ் அப்பெண்ணை நரகத்திலிருந்து காத்துவிடுவானா? முஹம்மது மக்களை குஷிப்படுத்த தப்புத்தப்பான கோட்பாடுகளை சத்தியங்களாக போதித்துள்ளார். இவைகளையெல்லாம் படிக்கும் கிறிஸ்தவர்கள் நகைப்பார்கள். இறைவன் என்பவன் யார்? அவன் குணாதிசயங்கள் என்ன? இறைவனின் நீதி எது, இறைவனின் அன்பு எது என்று கிறிஸ்தவர்கள் அறிந்துள்ளதின் படி பார்க்கும் போது, முஹம்மதுவின் போதனைகள் கிறிஸ்தவர்களைப் பொறுத்தமட்டில் நகைப்பிற்குரியது. முஹம்மதுவை ஒரு போதும் கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று அங்கீகரிக்கமாட்டார்கள். [85]

86. ஐம்பதுலிருந்து ஐந்தாக குறைக்கப்பட்ட இஸ்லாமிய தொழுகை 

ஒரு முறை முஹம்மதுவை ஜிப்ராயீல் தூதன் ஏழாம் வானம் வரைக்கும் அழைத்துச் சென்றாராம். அங்கு அல்லாஹ் முஸ்லிம்களுக்கு 50 முறை தொழவேண்டும் என்று கட்டளையிட்டானாம், ஆனால், மோசே முஹம்மதுவை சந்தித்து, 50 முறை ஒரு நாளுக்கு தொழுவது முடியாத காரியம் எனவே குறைத்துத் தரும்படி அல்லாஹ்விடம் கேள் என்றுச் சொல்ல, முஹம்மதுவும் கேட்டாராம், உடனே அல்லாஹ் அதனை 40 முறையாக குறைத்தாராம். மறுபடியும் மோசே இதுவும் அதிகம் தான் மேலும் குறைக்கச்சொல் என்று சொல்ல, முஹம்மது மறுபடியும் அல்லாஹ்விடம் சென்று கேட்டு, 30 முறையாக குறைத்துக்கொண்டாராம். மறுபடியும் மோசே முஹம்மதுவிற்கு அறிவுரை கூற தொழுகைகள், 20, 10, மற்றும் 5 என்று கடைசியாக குறைக்கப்பட்டதாம். இப்போது கேள்வி என்னவென்றால், ஆதியாகமத்தில் ஆபிரகாம் தேவனிடம் வேண்டிக்கொண்ட நிகழ்ச்சியை அப்படியே காபி அடித்து மாற்றி முஹம்மது கூறியுள்ளார். இதுமாத்திரமல்ல, மோசேக்கு இருக்கின்ற அறிவு கூட அல்லாஹ்விற்கும், முஹம்மதுவிற்கும் இல்லாமல் போனதுதான் ஆச்சரியம். மக்களின் நிலையை மோசே புரிந்துக்கொண்டது போல அல்லாஹ் புரிந்துக்கொள்ளவில்லை.  முஹம்மது தான் கேள்விப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகளை தனக்கு தோன்றியபடி மாற்றி கூறியுள்ளார். இப்படி பைபிளின் நிகழ்ச்சிகளை கலங்கப்படுத்தி மாற்றிச்சொல்பவரை எப்படி கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று ஏற்றுக்கொள்வார்கள்? [86]

87. இயேசு சிலுவையை உடைப்பாரா? பன்றியைக் கொள்வாரா?

முஹம்மது இயேசுவை ஒரு முஸ்லிம் போல குர்-ஆனில் சித்தரித்துள்ளார். பைபிளின் அனேக நிகழ்ச்சிகளை, நபர்களை முஹம்மது மாற்றி சொல்லியுள்ளார். இவர் சொன்னவைகளில் மிகப்பெரிய பொய் எதுவென்றால், இயேசு எதிர் காலத்தில் வருவார், அப்படி வந்து ”சிலுவையை உடைப்பார்” என்ற முஹம்மதுவின் கூற்றாகும். மேலும் இயேசு பன்றியை கொல்வார் என்றும் கூறியுள்ளார். உலகத்தில் உள்ள பன்றிகளைக் கொல்லவா இயேசு வரவேண்டும்? அவருக்கு இதைவிட வேறு நல்ல வேலை இல்லையா? இந்த விவரங்கள் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வருகைப்பற்றி சொல்லியவைகளுக்கு நேர் எதிரானவைகளாகும். இப்படி இயேசுவிற்கு விரோதமாகவும், பைபிளுக்கு விரோதமாகவும் சொன்னவரை எப்படி உண்மை தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்? இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுதலிக்கும் இவர் கள்ளத் தீர்க்கதரிசி அல்லவா? இவரை கிறிஸ்தவர்கள் ஒரு காலத்திலும் தீர்க்கதரிசி என்று ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.[87]

88. யூதர்கள் எஸ்றாவை வணங்கிக்கொண்டு இருந்தார்களா? சரித்திர பிழையைச் செய்த நபி

முஹம்மது அனேக சரித்திர பிழைகளை செய்துள்ளார். அதில் ஒன்று யூதர்கள் எஸ்றாவை வணங்கினார்கள் என்று முஹம்மது சொன்னதாகும். குர்-ஆனிலும் இந்த விவரம் சொல்லப்பட்டுள்ளது. நியாயத்தீர்ப்பு நாளில் யூதர்களிடம் கேள்வி கேட்கும் போது “'நாங்கள் அல்லாஹ்வின் மகன் உஸைர் அவர்களை வணங்கிக் கொண்டிருந்தோம்” என்றுச் சொல்வார்களாம். இது தவறான விவரமாகும். பைபிளில் எங்கும் நாம் இப்படி யூதர்கள் எஸ்றாவை தேவகுமாரனாக நினைத்து வணங்கியதாக பார்க்கமுடியாது. அனேக அற்புதங்கள் செய்து தன் தெய்வீகத்தன்மையை வெளிக்காட்டிய இயேசுவையே அவர்கள் நம்பாத போது, எப்படி யூதர்கள் எஸ்றாவை தேவகுமாரன் என்று நம்பி வணங்கியிருப்பார்கள். இன்று கூட யூதர்கள் இருக்கிறார்கள், அவர்களிடம் கேட்டாலும், அவர்கள் இப்படி சொல்பவர்களைப் பார்த்து நகைப்பார்கள். முஹம்மதுவின் கூற்றைக் கவனித்தால், ஏதோ ஒரு குழுவினர் அல்லது யூத வகுப்பினர் இப்படி எஸ்றாவை தொழுததாக சொல்லப்படவில்லை. ஒட்டுமொத்த யூதர்கள் இப்படி வணங்கியதாக சொல்லப்படுகின்றது. இது முஹம்மது செய்த மிகப்பெரிய சரித்திர பிழையாகும். இப்படிப்பட்ட பிழைகளைச் செய்தவர் எப்படி உண்மையான தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? கடந்த கால நிகழ்ச்சிகளிலேயே அதிக பிழைகளைச் செய்யும் இவரை எதிர்கால நிகழ்வுகளைச் சொல்லும் தீர்க்கதரிசியாக எப்படி கிறிஸ்தவர்கள் அங்கீகரிப்பார்கள்? இவர் ஒரு கள்ளத் தீர்கக்தரிசியாவார். [88]

89. சுயமரியாதையற்ற இறைவன், நரகத்திலிருந்து மக்களை வெறுமனே வெளியே கொண்டுவருபவன்

முஹம்மதுவிற்கு கற்பனைத்திரன் அதிகம் என்றுச் சொல்லவேண்டும். நியாயத்தீர்ப்பு நாளில் மக்கள் எப்படி நரகத்திலிருந்து வெளியேறுவார்கள் என்பது பற்றி சொந்தமாக பல கற்பனையான விவரங்களை கூறியுள்ளார். சில முஸ்லிம்களுக்கு அல்லாஹ் தங்கள் உற்றார் உறவினர்களை நரகத்திலிருந்து வெளியே கொண்டுவர அனுமதி அளிப்பானாம். ஒரு பொற்காசு/அறை பொற்காசு / கடுகுவிதை அளவிற்கு நம்பிக்கையுள்ள மக்களை நரகத்திலிருந்து கொண்டுவரும் படி அவர்களுக்கு அனுமதி அளிப்பானாம். அதே போல, அந்த முஸ்லிம்களும் நரகத்தில் இறங்கி தங்களுக்கு தெரிந்தவர்களை வெளியே கொண்டுவருவார்களாம். அதன் பிறகு அல்லாஹ் தன் கையை நரகத்தில் விட்டு, சிலரை அப்படியே எடுத்து, அவர்களை ஒரு நதியில் போட்டு, சுத்தப்படுத்துவானாம். இவைகளை படிக்கும் போது நமக்குத் தோன்றும் கேள்வி என்னவென்றால், ஒரு சுயமரியாதையற்ற இறைவனாக அல்லாஹ் செயல்பட்டுள்ளானா? என்பதாகும். உலக மக்கள் பாவம் செய்யும் போது, அல்லாஹ்வை மறுதலிக்கும்போது, அவரது நபியை ஏற்க மறுக்கும்போது, சும்மா இருந்துவிட்டு, அவர்கள் நரகத்தில் இருக்கும் சமயத்தில் மட்டும் தன் கையை நரகத்தில் விட்டு, அனேகரை எடுத்து சொர்க்கத்திற்கு அனுப்புவது ஒரு சுயமரியாதையுள்ள இறைவன் செய்யும் செயலா இது? பைபிளின் தேவன் சுயமரியாதையுள்ள இறைவன் ஆவார். பாவம் செய்பவர்களுக்கு தண்டனையை அளித்தார். மேலும் தாம் அன்புள்ளவர் என்பதை நிருபிப்பதற்காக, தன் வார்த்தையை அனுப்பி பாவபரிகாரம் செய்து, மக்களை இரட்சித்து, தன்னிடம் சேர்த்துக்கொண்டார். தேவன் 100% நீதியுள்ள நியாயாதிபதி அதே நேரத்தில் 100% அன்புள்ளவர். ஆனால், அல்லாஹ்வோ நீதியுள்ள நியாயாதிபதியுமல்ல, அன்புள்ளவரும் அல்ல. இப்படிப்பட்ட போதனைகளைச் செய்த முஹம்மதுவை எப்படி கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று நம்புவார்கள்? [89]

90. ஆண்களை இன்னும் தீயசெயல்கள் புரிய உற்சாகப்படுத்தும் இஸ்லாமை கொண்டுவந்தவர் உண்மைத் தீர்க்கதரிசியா?

ஒரு இஸ்லாமிய ஆண் தன் மனைவிக்கு வயதாகிவிட்டது என்பதால் விவாகரத்து செய்ய விரும்பினால், இந்த மனைவி தன் உரிமைகளை விட்டுக்கொடுத்தும், இதர சலுகைகளை விட்டுக்கொடுத்தும் தன் கணவனோடு ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம் என்று குர்-ஆனும், ஹதீஸ்களும் சொல்கின்றன. ஒரு பெண் தன் வாழ்நாளை தன் கணவனுக்காக குடும்பத்துக்காக செலவிட்டபின்பு, அவளுக்கு வயதாகிவிட்டால் அல்லது வியாதி வந்துவிட்டால், அவளை விவாரகத்து செய்யலாம் என்ற ஒரு காட்டுமிராண்டி சலுகையை ஆண்களுக்கு முஹம்மது கொடுத்துள்ளார். இப்படி தன் கணவன் தன்னை ஒதுக்கிவிடுவான் என்று பயந்தால், அந்தப் பெண், தன் உரிமைகளை விட்டுக்கொடுப்பது தவறு இல்லை என்று குர்-ஆனும் சொல்கிறது. இது தான் பெண்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் மரியாதையா? வாழ்நாளெல்லாம் தன் கணவனுக்காக உழைத்த பெண்ணிற்கு குர்-ஆன் கொடுக்கும் பரிசு இது தானா? இப்படிப்பட்ட சட்டங்களினால் தீயசிந்தனையுள்ள ஆண்கள் இன்னும் அதிக தீமையை பெண்களுக்கு எதிராகச் செய்ய உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். இதனால் தான் இஸ்லாமிய நாடுகளில் அதிக சதவிகித  பெண்கள் விவாகரத்து பெற்ற பெண்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட தீய சட்டங்களை கொண்டு வந்தவரை எப்படி கிறிஸ்தவர்கள் நபி என்று நம்புவார்கள்? இதே போல முஹம்மதுவும் தன் மனைவிக்கு செய்துள்ளார். இவர் ஒரு கள்ள நபி என்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். [90]

அடிக்குறிப்புக்கள்:

அனைத்து குர்-ஆன் வசனங்கள் “முஹம்மது ஜான்” குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

[81] ஸஹீஹ் புகாரி எண்: 29

29. 'எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, 'இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?' எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்தது, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்' என்றார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :2

[82] குர்-ஆன் 2:282 & ஸஹீஹ் புகாரி எண் 304

2:282. ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.

ஸஹீஹ் புகாரி எண் 304

304. 'ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர். 'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் 'ஆம்!' எனப் பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். Volume :1 Book :6

[83] ஸஹீஹ் புகாரி எண் 304

[84] ஸஹீஹ் புகாரி எண்கள் 533, 534, 535, 536, 537, 538. 539 & 639

533. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

"வெப்பம் கடுமையாகும்போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப் படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும்."  என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :9

534. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

"வெப்பம் கடுமையாகும்போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப் படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும்." 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

535. அபூ தர்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்களின் முஅத்தின், லுஹருக்கு பாங்கு சொல்ல முற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் 'கொஞ்சம் பொறு; கொஞ்சம் பொறு" என்று கூறிவிட்டு, 'கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்படாகும். எனவே வெப்பம் கடுமையாகும்போது (லுஹர்) தொழுகையைத் தாமதப் படுத்துங்கள்!" என்றார்கள். மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும் வரை நபி(ஸல்) அவர்கள் தாமதப் படுத்துங்கள்!" என்றார்கள். மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும் வரை நபி(ஸல்) அவர்கள் தாமதப் படுத்துவார்கள். (சூரியன் நன்றாகச் சாய்ந்து அஸருக்குச் சற்று முன்பாகத்தான் மணல் திட்டுகளின் நிழல் தென்படும்.) Volume :1 Book :9

536. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

"வெப்பம் கடுமையாகும்போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப் படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்படாகும்." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :9

537. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

"இறைவா! என்னுடைய ஒரு பகுதி, மறுபகுதியைச் சாப்பிட்டுவிட்டது என்று நரகம் இறைவனிடம் முறையிட்டது. கோடையில் ஒரு மூச்சு விடுவதற்கும் குளிரில் ஒரு மூச்சு விடுவதற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான். கோடை காலத்தில் நீங்கள் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நீங்கள் உணரும் கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம்."  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  Volume :1 Book :9

538. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

"வெப்பம் கடுமையாகும்போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப்படுத்துங்கள்! ஏனெனில், கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்படாகும்." என அபூ ஸயீது(ரலி) அறிவித்தார். Volume :1 Book :9

539. அபூ தர்(ரலி) அறிவித்தார். 

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். முஅத்தின் லுஹருக்கு பாங்கு சொல்ல முனைந்தபோது, 'கொஞ்சம் பொறு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் மீண்டும் பாங்கு சொல்ல அவர் முனைந்தபோது 'கொஞ்சம் பொறு' என்றனர். மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும் வரை தாமதப்படுத்தினார்கள். 'கடுமையான வெப்பம், நரக வெப்பத்தின் வெளிப்பாடாகும். எனவே வெப்பம் கடுமையாகும்போது (லுஹர்) தொழுகையைத் தாமதப் படுத்துங்கள்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். Volume :1 Book :9

629. அபூ தர்(ரலி) அறிவித்தார். 

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றிருந்தோம். (லுஹர் தொழுகைக்கு) முஅத்தின் பாங்கு சொல்ல ஆயத்தமானபோது 'கொஞ்சம் பொறு" என்று நபி(ஸல்) அவர்கள் முஅத்தினிடம் கூறினார்கள். சிறிது நேரம் கழித்து முஅத்தின் பாங்கு சொல்லத் தயாரான போதும் மலைக் குன்றுகளின் நிழல் அதே அளவிற்குச் சமமாகும் வரை '(பாங்கு சொல்வதைப்) பிற்படுத்துங்கள்" என்று நபி(ஸல்) அவர்கள் முஅத்தினிடம் கூறிவிட்டு, 'நிச்சயமாக இந்தக் கடும் வெப்பம் நரக வெப்பத்தின் வெளிப்பாடாகும்" என்று கூறினார்கள்.  Volume :1 Book :10

[85] ஸஹீஹ் புகாரி எண் 1249.

1249. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்களிடம் பெண்கள்(வந்து) 'எங்களுக்கும் ஒரு நாள் (உபதேசத்திற்காக) ஒதுக்குங்களேன் எனக் கேட்டார்கள். நபி(ஸல்) பெண்களுக்கு (ஒருநாள்) உபதேசம் செய்தார்கள். அதில் 'ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இறந்துவிட்டதால் அவர்கள் அப்பெண்ணை நரகத்திலிருந்து காக்கும் திரையாக ஆகிவிடுவார்கள்" எனக் கூறியதும் ஒரு பெண் 'இரண்டு குழந்தைகள் இறந்தால்?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இரண்டு குழந்தை இறந்தாலும் தான்" என்றார்கள். Volume :2 Book :23

[86] ஆதியாகமம் 18:16-33, ஸஹீஹ் புகாரி  3207 & 349

3207. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான 'புராக்' என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை), 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்றார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், '(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!" என்றார்கள். பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்க, 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் அவரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.

பிறகு நான், ஈஸா(அலை) அவர்களிடமும் யஹ்யா(அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், 'சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்" என்றார்கள். பிறகு, நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு, நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.

நான் இத்ரீஸ்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன்(அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார். பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளிக்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று வாழ்த்தினார்கள்.

நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், 'இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்" என்று பதிலளித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது... நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வராவாகட்டும்" என்றார்கள். பிறகு, 'அல் பைத்துல் மஃமூர்' எனும் 'வளமான இறையில்லம்' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், 'இதுதான் 'அல் பைத்துல் மஃமூர்' ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும்" என்றார்.

பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) 'ஹஜ்ர்' எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்" என்று பதிலளித்தார்கள்.

பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா(அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்டார்கள். நான், 'என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன" என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்" என்றார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போன்றே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்க, 'அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்" என்றேன். அதற்கு அவர்கள், 'முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, 'நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்" என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), 'நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்" என்று அறிவிக்கப்பட்டது. Volume :3 Book :59

[87] வெளிப்படுத்தின விசேஷம் & ஸஹீஹ் புகாரி எண்கள்: 3448, 2222 & 2476

3448. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மகன் உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.) செல்வம் (பெரும்) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா (நெற்றி நிலத்தில் பட அல்லாஹ்வை வணங்குவது) இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாக (மக்களின் பார்வையில்) ஆகிவிடும். 

இந்த நபிமொழியை அறிவித்துவிட்டு அபூ ஹுரைரா(ரலி), 'வேதம் வழங்கப்பட்டவர்களில் எவரும், தாம் இறப்பதற்கு முன்பாக அவர் (முஹம்மதின்) மீது நம்பிக்கை கொள்ளாமல் போக மாட்டார். மேலும், மறுமை நாளில் அவர்களுக்கெதிராக அவர் சாட்சியம் அளிப்பார்' (திருக்குர்ஆன் 04:159) என்னும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். Volume :4 Book :60

2222. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

"என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை முறிப்பார்! பன்றியைக் கொல்வார்! ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!"  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  Volume :2 Book :34

2476. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

மர்யமின் குமாரர்(ஈஸா) அவர்கள் நீதி செலுத்தும் நடுவராக உங்களிடையே இறங்குவார்கள். அவர்கள் வந்தவுடன் சிலுவையை உடைப்பார்கள்; பன்றியைக் கொல்வார்கள்; 'ஜிஸ்யா' வரியை (ஏற்க) மறுப்பார்கள். எவரும் பெற முன் வராத அளவுக்கு செல்வம் பெருகி வழியும். இவையெல்லாம் நடக்காதவரை உலக முடிவு (மறுமை) நாள் வராது. Volume :2 Book :46

[88] குர்-ஆன் 9:30 & ஸஹீஹ் புகாரி எண்: 7439.

குர்-ஆன் 9:30. யூதர்கள் (நபி) "உஜைரை" அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர். (இவ்வாறே) கிறிஸ்தவர்கள் "மஸீஹை" அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர். இவர்கள் தங்கள் வாய்களால் கூறும் இக்கூற்றானது இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்பவர்களின் கூற்றையே ஒத்திருக்கின்றது. அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான். (சத்தியத்தைப் புறக்கணித்து) இவர்கள் எங்கு வெருண்டோடுகின்றனர்?

ஸஹீஹ் புகாரி எண்: 7439. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். 

நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?' என்று (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்டோம். அதற்கு அவர்கள், '(மேகமூட்டமில்லாது) வானம் தெளிவாக இருக்கையில் சூரியனையும் சந்திரனையும் பார்க்க நீங்கள் (முண்டியத்துக் கொண்டு) சிரமப்படுவீர்களா?' என்று கேட்டார்கள். நாங்கள், 'இல்லை' என்று பதிலளித்தோம். இவ்விரண்டையும் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே அந்த நாளில் உங்களுடைய இறைவனைக் காணவும் நீங்கள் சிரமப்பட மாட்டீர்கள்' என்று கூறிவிட்டு (பின்வருமாறு) விளக்கினார்கள். (மறுமை நாளில்) அழைப்பாளர் ஒருவர், 'ஒவ்வொரு சமுதாயத்தாரும் தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்' என்று அழைப்புவிடுப்பார். அப்போது சிலுவை வணங்கிகள் தங்கள் சிலுவையுடனும், சிலை வணங்கிகள் தங்கள் சிலைகளுடனும், ஒவ்வொரு (பொய்த்) தெய்வ வழிபாட்டார்கள் தத்தம் கடவுள்களுடனும் செல்வார்கள். முடிவில் அல்லாஹ்வை வணங்கிக்கொண்டு நன்மைகளும் புரிந்து கொண்டிருந்த நல்லவர்கள், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். பின்னர் நரகம் கொணரப்பட்டுக் கானலைப் போன்று அவர்களுக்குக் காட்டப்படும். அப்போது யூதர்களிடம், 'நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்?' என்று கேட்கப்படும் அதற்கு அவர்கள், 'நாங்கள் அல்லாஹ்வின் மகன் உஸைர் அவர்களை வணங்கிக் கொண்டிருந்தோம்' என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், 'நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கே மனைவியோ மக்களோ இருக்கவில்லை' என்று சொல்லப்படும். பிறகு அவர்களிடம், 'இப்போது நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?' என்று கேட்கப்படும். அதற்கவர்கள், 'எங்களுக்கு (குடிப்பதற்கு நீர்) புகட்டுவாயாக!' என்பார்கள். 

அப்போது (அவர்களிடம் கானலைப் போன்று நரகம் காட்டப்பட்டு), 'குடியுங்கள்' என்று கூறப்படும். (அதைக் குடிக்க முனையும்போது) அவர்கள் நரகத்தில் விழுந்து விடுவார்கள். பின்னர் கிறிஸ்தவர்களிடம், 'நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்கப்படும் அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் மகன் மஸீஹை (ஈசாவை) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம்' என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், 'நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள்; அல்லாஹ்வுக்கு மனைவியோ மக்களோ இருக்கவில்லை' என்று கூறப்பட்ட பின் 'நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், 'நீ எங்களுக்கு (நீர்) புகட்டுவதையே நாங்கள் விரும்புகிறோம்' என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம் (கானலைப் போன்று காட்சி தரும் நரகத்தைக் காட்டி) 'குடியுங்கள்!' என்று கூறப்படும். அப்போது நரகத்தில் அவர்களும் விழுந்துவிடுவார்கள். 

இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் (கொண்டு நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்களிடம் 'மக்கள் (அனைவரும் தத்தம் தெய்வங்களுக்குப் பின்னால்) சென்றார்களே! நீங்கள் மட்டும் ஏன் இங்கேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், '(உலகத்தில்) நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும் (அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல்) அவர்களைப் பிரிந்திருந்தோம். (இப்போது மட்டும் அவர்கள் பின்னால் நாங்கள் செல்வோமா?) இங்கு ஓர் அழைப்பாளர்' 'ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலக வாழ்வில்) தாம் வணங்கிக் கொண்டிருந்த அவர்களுடன் சேர்ந்துகொள்ளட்டும் என்று அழைக்கக் கேட்டோம். நாங்கள் (வணங்கிக் கொண்டிருந்த) எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்' என்று கூறுவார்கள். அப்போது சர்வ வல்லமை படைத்தவ(னான இறைவ)ன், அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றம் அல்லாத வேறொரு தோற்றத்தில் அவர்களிடம் முதல் முறையாக வந்து, 'நானே உங்கள் இறைநம்பிக்கையாளர்கள், 'நீயே எங்கள் இறைவன்' என்று சொல்வார்கள். அப்போது இறைவனிடம் இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேச மாட்டார்கள். 

அப்போது, 'அவனை இனங்கண்டுகொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?' என்று (ஒருவர்) கேட்பார். அதற்கு இறை நம்பிக்கையாளர்கள், '(இறைவனி) கால் (பாதம்) தான்' என்று கூறுவார்கள். உடனே அல்லாஹ் தன்னுடைய காலை வெளிப்படுத்துவான். இறைநம்பிக்கையாளர்கள் யாவரும் அவனுக்கு சிர வணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும் பாராட்டுக்காகவும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து (தொழுது) கொண்டிருந்தவர்கள் மட்டுமே அப்போது எஞ்சியிருப்பார்கள்; அவர்கள் சிரவணக்கம் செய்ய முற்படுவார்கள். ஆனால், அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே பலகையைப் போன்று மாறிவிடும். (அவர்களால் சிரம் வணக்கம் செய்ய முடியாது.)78 

பிறகு பாலம் கொண்டு வரப்பட்டு, நரகத்தின் மேலே கொண்டுவைக்கப்படும். (இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொன்னபோது,) நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன பாலம்?' என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், 'அது (கால்கள்) வழுக்குமிடம்; சறுக்குமிடம்; அதன் மீது இரும்புக் கொக்கிகளும் அகன்ற நீண்ட முற்களும் இருக்கும். அந்த முட்கள் வளைந்திருக்கும். 'நஜ்த்' பகுதியில் முளைக்கும் அவை 'கருவேல மர முற்கள்' எனப்படும்' என்றார்கள். (தொடர்ந்து கூறினார்கள்:) இறைநம்பிக்கையாளர் அந்தப் பாலத்தை கண்சிமிட்டலைப் போன்றும், மின்னலைப் போன்றும், காற்றைப் போன்றும், பந்தயக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களைப் போன்றும் (விரைவாகக்) கடந்து விடுவார். எந்தக் காயமுமின்றி தப்பிவிடுவோரும் உண்டு. காயத்துடன் தப்புவோரும் உண்டு. மூர்ச்சையாகி நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் அவர்களில் கடைசி ஆள் கடுமையாக இழுத்துச் செல்லப்படுவார். பின்னர், தாம் தப்பித்துவிட்டோம் என்பதை இறைநம்பிக்கையாளர்கள் காணும்போது தம் சகோதரர்களுக்காக சர்வ அதிகாரமும் படைத்த (இறை)வனிடம் அன்று அவர்கள் கடுமையாக மன்றாடுவார்கள். அந்த அளவிற்கு (இம்மையில்) உங்களுக்கத் தெளிவாகிவிட்ட உரிமைக்காகக் கூட நீங்கள் என்னிடம் வலியுறுத்திக் கேட்டிருக்கமாட்டீர்கள். அப்போது அவர்கள், 'எங்கள் இறைவா! (இவர்கள்) எங்களுடன் தொழுது கொண்டிருந்தார்கள்; எங்களுடன் நோன்பு நோற்றார்கள்; எங்களுடன் (மற்ற) நல்லறங்கள் புரிந்து கொண்டிருந்தார்கள் (எனவே இவர்களை நீ காப்பாற்றுவாயாக)' என்று வேண்டுவார்கள். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், 'நீங்கள் சென்று, எவருடைய உள்ளத்தில் ஒரு பொற்காசு (தீனார்) அளவுக்கு இறைநம்பிக்கை இருக்கக் காண்கின்றீர்களோ அவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்' என்று கூறுவான். 

அவ்வாறே அவர்களும் (நரகவாசிகளிடம்) செல்வார்கள். அவர்களின் முகங்களைக் கரிக்கக் கூடாதென நரகத்திற்கு அல்லாஹ் தடை விதித்துவிடுவான். அப்போது (அந்த நரகவாசிகளில்) சிலர் தம் பாதம் நரகத்திற்குள் மறையும் அளவிற்கு, பாதி கால்கள் மறையும் அளவிற்கு நரம்னுள் கிடப்பார்கள். உடனே அவர்கள் தமக்கு அறிமுகமானவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுவார்கள். பிறகு மீண்டும் (இறைவனிடம்) செல்வார்கள். 'எவருடைய உள்ளத்தில் பாதி பொற்காசு அளவுக்கு இறைநம்பிக்கை உள்ளதெனக் காண்கிறீர்களோ அவர்களையும் வெளியேற்றுங்கள்' என்பான். அவ்வாறே அவர்கள் தமக்குத் தெரிந்தவர்களை வெளியேற்றிவிட்டு மறுபடியும் (இறைவனிடம்) வருவார்கள். அப்போது அவன், 'எவருடைய உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை இருக்கக் கண்டீர்களோ அவர்களையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்' என்று சொல்வான். அவ்வாறே அவர்கள் (வந்து) தமக்கு அறிமுகமானவர்களை (அதிலிருந்து) வெளியேற்றுவார்கள். 

இதன் அறிவிப்பாளரான அபூ ஸயீத்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 

(இதை) நீங்கள் நம்பாவிட்டால், 'நிச்சயமாக அல்லாஹ் எவருக்கும் அணுவளவு கூட அநீதி இழைக்கமாட்டான். அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதை இரட்டிப்பாக்குவான்' எனும் (திருக்குர்ஆன் 04:40 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள். 

இவ்வாறு இறைத்தூதர்கள், வானவர்கள், இறைநம்பிக்கையாளர்கள் ஆகியோர் (தத்தம் தகுதிக்கேற்ப) பரிந்துரை செய்வார்கள். அப்போது சர்வ அதிகாரம் படைத்த (இறை)வன் '(இனி) என் பரிந்துரை (மட்டுமே) எஞ்சியிருக்கிறது' என்று கூறிவிட்டு, நரகத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவு மக்களை அள்ளியெடுத்து அவர்களை வெளியேற்றுவான். அவர்கள் கரிந்து போயிருப்பார்கள். எனவே, சொர்க்க வாசலிலுள்ள ஒரு நதியில் அவர்கள் போடப்படுவார்கள். அதற்கு 'ஜீவ நீர்' ('மாஉல் ஹயாத்') என்று பெயர். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று நதியின் இரண்டு மருங்கிலும் முளைத்து (நிறம் மாறி) விடுவார்கள். பாறையில் ஓரத்திலும் மரத்தின் ஓரத்திலும் இந்தப் பயிரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் வெயில் பக்கமாக இருப்பது பச்சையாகவும், நிழல் பக்கமாக இருப்பது வெள்ளையாகவும் இருக்கும். 

ஆக, இவர்கள் (அந்த நதியிலிருந்து) வெளியேறும்போது முத்தைப் போன்று (புதுப் பொலிவுடன்) வெளியேறுவார்கள். அவர்களின் கழுத்தில் (நரகத்திலிரந்து விடுதலை பெற்றவர்கள் என்பதற்கான) முத்திரை பதிக்கப்படும். பிறகு அவர்கள் சொர்க்கத்தினுள் நுழைவார்கள். அப்போது சொர்க்கவாசிகள் (இவர்களைப் பார்த்து), 'இவர்கள் பேரருளாளனால் விடுதலை செய்யப்பட்டவர்கள்; இவர்கள் எந்த நற்செயலும் புரியாமல், எந்த நன்மையும் ஏற்கெனவே செய்திராமல் அவனே இவர்களைச் சொர்க்கத்தினுள் பிரவேசிக்கச் செய்தான்' என்று கூறுவர். பிறகு (அவர்களிடம்) நீங்கள் காண்கிறீர்களே இதுவும் உங்களுக்கு உண்டு; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உங்களுக்கு உண்டு' என்று (நற்செய்தி) சொல்லப்படும். Volume :7 Book :97

[89] ஸஹீஹ் புகாரி எண்: 7439. 

ஸஹீஹ் புகாரி எண்: 7439

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். 

[90] குர்-ஆன் 4:128 & ஸஹீஹ் புகாரி எண் 5206

4:128. ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை; அத்தகைய சமாதானமே மேலானது; இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

ஸஹீஹ் புகாரி 5206. 

ஆயிஷா(ரலி) அறிவித்தார் 

ஒரு பெண் ஒருவரின் மனைவியாக இருந்து வருகிறாள். (அவளுடைய முதுமை, நோய் போன்ற காரணத்தினால்) அவளை அவருக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது; அவளை விவாகரத்துச் செய்துவிட்டு மற்றொருத்தியை மணமுடிக்கவும் அவர் விரும்புகிறார். (இந்நிலையில்) அவள் 'என்னை (மனைவியாக) இருக்கவிடுங்கள்; என்னை விவாகரத்துச் செய்துவிடாதீர்கள். பின்னர் (வேண்டுமானால்) மற்றொரு பெண்ணை மணந்துகொள்ளுங்கள். எனக்காகச் செலவழிப்பதிலிருந்தும், இரவைப் பகிர்ந்தளிப்பதிலிருந்தும்  நீங்கள் விலகிக் கொள்ளலாம்'' என்று தம் கணவரிடம் கூறுகிறாள். இதையே இவ்வசனம் கூறுகிறது: ஒரு பெண், தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்து கொள்ளமாட்டான் என்றோ, புறக்கணித்துவிடுவான் என்றோ அஞ்சினால், கணவன் - மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றைப் பரஸ்பரம்விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில தவறேதும் இல்லை. (திருக்குர்ஆன் 04:128)  Volume :5 Book :67

பாகம் 10ஐ படிக்க சொடுக்கவும்

உமரின் இதர கட்டுரைகள்